ஜூன் 17 வரை.. பழசு முதல் புதுசு வரை.. iPhone, iPad, MacBook என பல Apple தயாரிப்புகள் மீது பயங்கர டிஸ்கவுண்ட்!
ஐபோன் (iPhone), ஐபேட், மேக்புக் உட்பட பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளை.. அட்டகாசமான தள்ளுபடி விலையில் வாங்க இதைவிட ஒரு சூப்பர் சான்ஸ் கிடைக்காது என்பது போல.. இந்திய எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் செயின் ஆன விஜய் சேல்ஸ் அதன் ஆப்பிள் டேஸ் விற்பனையை (Vijay Sales Apple Days Sale) அறிவித்துள்ளது. ஜூன் 8 - 17 வரை நடைபெறும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையானது விஜய் சேல்ஸ் ஸ்டோர் மற்றும் விஜய் சேல்ஸின் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மின் கீழ் அணுக கிடைக்கும். என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள்? இதோ விவரங்கள்:
ஐபோன் 15 (128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மீதான சலுகை: இந்த மாடலின் அசல் அறிமுக விலை ரூ.70,900 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.6,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.64,900 க்கு வாங்க கிடைக்கும்.

ஐபோன் 15 ப்ரோ (1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மீதான சலுகை: இந்த மாடலின் அசல் அறிமுக விலை ரூ.1,84,900 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ்-ல் ரூ.1,63,490 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் டேஸ் விற்பனையின் பகுதியாக இதன் மீது கூடுதலாக ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக இந்த மாடலின் இறுதி விலையை ரூ.1,60,490 க்கு கொண்டுவர முடியும்.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மீதான சலுகை: இந்த மாடலின் அசல் அறிமுக விலை ரூ.1,99,900 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ்-ல் ரூ.1,77,490 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் டேஸ் விற்பனையின் பகுதியாக இதன் மீது கூடுதலாக ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக இந்த மாடலின் இறுதி விலையை ரூ.1,74,490 க்கு கொண்டுவர முடியும்.
ஐபோன் 13 (128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மீதான சலுகை: இந்த மாடலின் அசல் அறிமுக விலை ரூ.51,999 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.1,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.50,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் (Apple iPad 9th Gen): ஆப்பிளின் இந்த 9த் ஜெனரேஷன் ஐபேட் மாடலின் வழக்கமான விலை ரூ.26,990 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.2,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.24,990 க்கு வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் ஐபேட் 11 ப்ரோ (iPad Pro 11 inch): ஆப்பிளின் இந்த 11-இன்ச் ஐபேட் மாடலின் வழக்கமான விலை ரூ.95,00 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.4,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.91,000 க்கு வாங்க கிடைக்கும்.
எம்3 சிப் உடனான ஆப்பிள் மேக்புக் ஏர் (Apple MacBook Air with M3 Chip): இந்த ஆப்பிள் மேக்புக் மாடலின் வழக்கமான விலை ரூ.1,06,900 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.10,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.96,900 க்கு வாங்க கிடைக்கும்.
எம்3 மேக்ஸ் சிப் உடனான ஆப்பிள் மேக்புக் ஏர் (Apple MacBook Air with M3 Max Chip): இந்த ஆப்பிள் மேக்புக் மாடலின் வழக்கமான விலை ரூ.2,95,890 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.10,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.2,85,890 க்கு வாங்க கிடைக்கும்.
ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 9 (Apple Watch Series 9): ஆப்பிளின் இந்த ஸ்மார்ட் வாட்ச் சீரிஸின் வழக்கமான விலை ரூ.39,100 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.2,500 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.36,600 க்கு வாங்க கிடைக்கும்.
யூஎஸ்பி டைப்-சி உடனான 2ன்ட் ஜென் ஏர்பாட்ஸ் ப்ரோ (AirPods Pro 2nd Gen with USB-C): ஆப்பிளின் இந்த ஏர்பாட்ஸ் மாடலின் வழக்கமான விலை ரூ.23,090 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.2,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.21,090 க்கு வாங்க கிடைக்கும்.
ஹோம் பாட் மினி (HomePod Mini) மீதான சலுகை: ஆப்பிளின் ஹோம்பாட் மினி மாடலின் வழக்கமான விலை ரூ.9,390 ஆகும். இருப்பினும் இது விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.1,000 உடனடி தள்ளுபடியை பெற்று ரூ.8,390 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications