கம்பீரமான தோற்றத்தில் வியூபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்!

அதிரடியாக பல புதிய ஸ்மார்ட்போன்களை வியூசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் வியூசோனிக் 4-எஸ் என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச மொபைல் கண்காட்சியில் அதிகார பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது வியூசோனிக் நிறுவனம்.
இந்த புதிய வியூபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் பிஎஸ் எல்சிடி திரை கொண்டது. இதனால் 960 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பான புகைப்படத்தினை எடுக்க, இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. அதோடு இதில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. வியூசோனிக் நிறுவனத்தின் இந்த புதிய வியூபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன், ஐரோப்பா நாட்டில் ஜூன் மாதத்தில்
வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும். இதனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications