புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் வியூசோனிக்!

By Super
|
புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் வியூசோனிக்!

வியூசோனிக் நிறுவனம் புதிதாக டியூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வியூபோன்-3 என்ற இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரமும் கூட வெளியாகி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிக சவுகரியம் தான். இந்த ஸ்மார்ட்போன் பற்றி முதலில் கூற வேண்டியது வைபை வசதி.

இப்போதெல்லாம் ரயிலில் கூட வைபை வசதியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இன்றைய சூழலில் பிரவுசிங் வசதி மிக முக்கியம் என்பதும் தெரிந்துவிட்டது. இந்த வியூபோன் ஸ்மார்ட்போனில் எளிதாக வைபை வசதியினையும் பெற முடியும்.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 3.5 இஞ்ச் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரையினை வழங்கும். இதன் கேமராவும் ஆட்டோ ஃபேக்கஸ் தொழில் நுட்பம் கொண்ட 5 மெகா பிக்ஸலில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தெளிவான துல்லியம் கொண்ட புகைப்படத்தினை கொடுக்கும்.

பொழுதுபோக்கு அம்சமாக எஃப்எம் ரேடியோ வசதியை பயன்படுத்தவும் உதவும் இந்த ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரியினையும் கொடுக்கும். புளூடூத் 2.1 மூலம் தகவல்களை எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான தொழில் நுட்பத்தில் அசத்துவது மட்டும் அல்லாமல், கவர்ச்சிகரமான விலையையும் கொண்டது. இந்த வியூபோன்-3 ஸ்மார்ட்போனை ரூ.9,990 விலையில் பெற முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X