புதிய வியூகத்துடன் வியூசோனிக் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
புதிய வியூகத்துடன் வியூசோனிக் ஸ்மார்ட்போன்!

கடந்த ஆண்டு அனைத்து மொபைல் நிறுவனங்களும் புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து தங்களது தொழில்நுட்ப பராக்கிரமத்தை நிரூபிக்க அரும்பாடு பட்டன. இதனால் இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடிக்க நிறைய மொபைல் நிறுவனங்கள் துடித்து கொண்டு இருக்கிறது.

வியூசோனிக் நிறுவனமும் அப்படித்தான். வியூபோன்-3 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. மொபைல் மார்கெட்டை இந்த ஸ்மார்ட்போன் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஞர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

வியூசோனிக் நிறுவனம் லத்தீன் அமெரிக்க வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தனது மின்னனு சாதனங்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த வியூபோன்-3 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.

இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் கேமரா கவலை முற்றிலும் அகன்றுவிடும். இதனால் சிறந்த துல்லியத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோவினை அழகாக பெறலாம். இதில் உள்ள 800 மெகாஹெர்ட்ஸ் கியூவள்காம் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் எளிதாக இயங்க துணை புரியும்.

பல புதிய தொழில் நுட்ப முடிச்சுகளை அவிழ்க்க தயாராக இருக்கும் இந்த புதிய வியூபோன்-3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இனி பலரை உறங்கவிடாமல் செய்யவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வெளி வந்தால் நிச்சயம் அதற்கு வரவேற்பு அதிகம் இருப்பது இயல்பு தானே. இந்த ஸ்மார்ட்போன் வரும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot