அதிக வசதிகளுடன் புதிய பட்ஜெட் மொபைல்: வீடியோகான் அறிமுகப்படுத்துகிறது

அந்த நம்பிக்கையை வீடியோகான் இன்று வரை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தனது புதிய பட்ஜெட் மொபைலை அதிக தரத்துடனும், வசதிகளுடன் வெளியிடுகிறது வீடியோகான்.
இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் வெறும் 93.2 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
ஃப்ளாஷ் லைட் மற்றும் டிஜிட்டல் சூம் வசதியுடன் கூடிய 1.3 மெகா பிக்ஸல் கேமரா இதில் உள்ளது. டி-ஃப்ளாஷ் கார்டு பயன்படுத்த தனி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
எல்ஐ-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து 5 மணி நேரம் டாக் டைம் வசதியையும், 270 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் வழங்குகிறது.
கூடுதல் ஏ2டிபி புளூடூத் வசதியும் உள்ளது. இதனால் அதி வேகத்தில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள முடியும். இது ஜிபிஆர்எஸ் மற்றும் யூஎஸ்பி வசதி கொண்டது.
டி-9 டிக்ஷனரியின் பயன்பாடுகளையும் இதில் பெற முடியும். இதன் வசதிகளைக் கேட்டவுடன் இந்த மொபைல் நாலாயிரம் விலையில் இருக்கும் என்று எண்ணத் தோன்றும். ஆனால், ஆச்சரியமூட்டும் வகையில் வி-1531 மொபைலை வெறும் ரூ.1,800 விலையில் அறிமுகப்படுத்த வீடியோகான் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications