Home
Mobile

வீடியோகான் அல்ட்ரா30 அறிமுகம் : 4ஜி, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ரூ.8,590/-க்கு.!

கடந்த அக்டோபர் மாதம் அல்ட்ரா50 கருவியை தொடர்ந்து வீடியோகான் இந்தியாவில் அதன் அல்ட்ரா30 ஸ்மார்ட்போனை 4ஜி வரிசை விரிவாக்கத்துடன் வெளியிட்டுள்ளது.

By Muthuraj

புதிதாய் அறிமுகம் செய்யப்டுல அல்ட்ரா30 கருவியானது முந்தைய அல்ட்ரா50 கருவியை போன்றே தான் இருக்கிறது. மிகவும் கவனிக்கத்தக்க வண்ணம் 4ஜி வோல்ட் ஆதரவு மற்றும் ஒரு பெரிய பேட்டரி பேக் ஆகியவைகள் இக்கருவியின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

அதுமட்டுமின்றி, வீடியோகான் அல்ட்ரா30 ஸ்மார்ட்போன் கருவியானது ஒரு 'சிறப்பு அறிமுக விலை'யின் கீழ் ரூ.8,590/- என்ற விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள.

இயங்குதளம், டிஸ்ப்ளே

இயங்குதளம், டிஸ்ப்ளே

பிரத்யேகமாக ஸ்னாப்டீல் தளத்தில் நீல தங்க நிற வேரியண்ட்டில் கிடைக்கும் இக்கருவி, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மிராவிஷன் (MiraVision) மற்றும் டிராகன் ட்ரயல்எக்ஸ் (DragontrailX) 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்ட ஒரு 5 அங்குல (720x1280)எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செயலி, மெமரி

செயலி, மெமரி

மேலும் இக்கருவி ஒரு 64-பிட் 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் மீடியா டெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 64ஜிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிக்கும் வசதியும் கொண்டுள்ளது.

பேட்டரி, கேமிரா

பேட்டரி, கேமிரா

இரட்டை சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் செய்யும் 4000எம்ஏஎச் திறன் பேட்டரியை கொண்டுள்ளது. கேமிரா துறையை பொருத்தமட்டில் இரட்டை எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப் மற்றும் கொரில்லா கிளாஸ் லென்ஸ் கொண்ட 13 எம்பி பின்பக்க கேமிரா மற்றும் குறைந்த ஒளி செல்ஃபிகளுக்கான எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு மற்றும் பிற

இணைப்பு ஆதரவு மற்றும் பிற

4ஜி வோல்ட், வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், மற்றும் எப்எம் ரேடியோ உள்ளிட்ட வழக்கமான இணைப்பு ஆதரவு அம்சங்கள் கொண்ட இக்கருவி டூவல் வாட்ஸ்ஆப், எஸ்ஓஎஸ்-பீ சேப் மற்றும் கெஸ்டர் கட்டுப்பாடுகள் ஆகியவைகளும் கொண்டுள்ளது. அளவீட்டில்144x73.8x9.8எம்எம் மற்றும் 166.5 கிராம் எடையுடையது.

சிறந்த சலுகை

சிறந்த சலுகை

வெளியீட்டு நிகழ்வில் பேசிய வீடியோகான் (தொழில்நுட்ப & கண்டுபிடிப்பு) தலைவர் அக்ஷய் தூட் "வீடியோகான் சிறந்த சலுகையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவதை தொடரும்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மோட்டோரோலா மோட்டோ எம் : ரூ.15.999/-க்கு இந்தியாவில் வெளியீடு.!

Best Mobiles in India

English summary
Videocon Ultra30 With 4G VoLTE Support, Front Flash, 4000mAh Battery Launched at Rs. 8,590. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X