அமெரிக்காவுக்கு 10பைசாவில் பேசலாங்க!!!

Written By:

மக்களுக்கு மொபைல் போன்களின் தேவைகள் அதிகம் ஆக ஆக டெலிகாம் சேவைகளை அளிக்கும் நிறுவனங்களும் பல புதிய சலுகைகளை மக்களுக்கு ஏற்ற வகையில் வழங்குகின்றனர். நாளுக்கு நாள் இந்த சலுகைகள் அதிகரித்து வருகின்றன.

இப்பொழுது வீடியோகான் நிறுவனம் அதிகம் US மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளுக்கு அதிகம் போன் பேசும் மக்களுக்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ILD (International Long Distance) என்ற அழைக்கப்படும் இந்த சலுகையை பழைய வீடியோகான் பயனாளிகள் புதிதாக வரும் வீடியோகான் பயனாளிகள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவுக்கு 10பைசாவில் பேசலாங்க!!!

இந்த ILD பேக் மூலம் 1000 நிமிடங்கள் US மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளுக்கு நீங்கள் பேசலாம். இந்த பேக்கின் விலை ரூ.105 தான் கணக்கிட்டால் ஒரு நிமிடத்திற்க்கு 10பைசா மட்டுமே செலவாகிறது. புதிதாக வரும் வீடியோகான் பயனாளிகளுக்கு இந்த பேக்கின் விலை ரூ.135 ஆகும்.

வழக்கமாக வீடியோகான் சேவையில் US மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளுக்கு பேசினால் நிமிடத்திற்க்கு ரூ.6.40 செலவாகும். ஆனால் இந்த புதிய சலுகையில் உங்களுக்கு கிட்டதிட்ட 98% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் லோக்கல் கால்களை விட ISD கால்கள் கம்மி விலையில் உள்ளது.

இந்த புதிய சலுகையின் அறிவி்ப்பு விழாவில் கலந்துகொண்ட வீடியோகான் டெல்கம்மியுனிகேஷனின் டைரக்டர் மற்றும் சிஈஓவான அரவிந்த் பாலி பேசுகையில், வீடியோகான் தனது பயனாளிகளுக்கு இன்னும் பல புதிய சலுகைகளை விரைவில் கொண்டு வர உள்ளது என தெரிவித்தார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot