நவீன வடிவமைப்புடன் புதிய ஆடம்பர போன்கள்: வெர்ச்சூ அறிமுகம்

Posted By: Staff

நவீன வடிவமைப்புடன் புதிய ஆடம்பர போன்கள்: வெர்ச்சூ அறிமுகம்
படாடோபான வாழ்க்கைக்கு, வெர்ச்யூ கான்ஸ்டெலேஷன் மொபைல் ஸ்டெய்ன் பிரவுன், ரெட் கோல்ட் மிக்ஸ்டு மெட்டல்ஸ் என்ற இரண்டு மாடல்களில் புதிய ஆடம்பர மொபைல்போன்கள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளன.

விஞ்ஞான உலக்திதல் நாளுக்கு நாள் தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகிறது. 3ஜி, டியூவல் போன்ற வசதிகள் உள்ள மொபைலை ஆசை தீர பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு, வெர்ச்யூ கான்ஸ்டலேஷன் என்ற ஆடம்பர தோற்றம் கொண்ட மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது வெர்ச்யூ நிறுவனம்.

நோக்கியாவின் கீழ் செயல்பட்டு வரும் வெர்ச்சூ நிறுவனம் பிரத்யேக அம்சங்கள் கொண்ட ஆடம்பர போன் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் வெளியிடும் மொபைல்கள் வாழ்வில் ஆடம்பரத் தேவைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான படைப்பு என்று சொல்லலாம்.

இதுவே வெர்ச்யூ நிறுவனத்தின் முதல் டச் ஸ்க்ரீன் மாடல். கான்ஸ்டலேஷன் மொபைல் மிகவும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த மொபைல் அதிகமான அப்ளிக்கேஷன் வசதியுடன் வெளிவந்து மக்களை குதூகலப்படுத்தப் போகிறது.

கான்ஸ்டலேஷன் மொபைல் அழகான வளைவுகளுடனும், நுனுக்கமான தொழில் நுட்பத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சேஃபையர் க்ரிஸ்டல் திரை கொடுக்கப்பட்டுள்ளதால் கண்களை பாதிக்காமல் சிறந்த காட்சிகளை வழங்கும். இதன் கேமராவை சுற்றிலும் ரூபி பதிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரி பெர்ரி ஆஸ்டிங் அவர்கள் இந்த மொபைலின் அறிவிப்பு விழாவில் கூறுகையில் வெர்ச்யூ கான்ஸ்டெலேஷன் மொபைல் ஒரு தனித்துவம் கொண்ட போன் மாடல் என்று குறிப்பிட்டுள்ளார். அது உண்மைதான் என்பது, இந்த மொபைலை பயன்படுத்துகையில் நிச்சயம் உணர முடியும்.

ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், ரஷியன், அரபிக், சீனா போன்ற மொழிகளில் சிட்டி ப்ரீஃப் டிராவல் அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த நகரத்தை பற்றிய விவரத்தையும் பெற்று பயனை அடைய முடியும்.

இந்த அப்ளிகேஷன் வசதி ஒரு "கைகொடுக்கும் தோழன்" என்று கூறலாம். இதனால் புதிய இடங்களுக்கு செல்லும் போது விவரத்தினைப் பெற மனிதர்களைத் தேடி அலைய வேண்டி அவசியம் இருக்காது. இது போல் 200 நகரங்களின் தகவல்களைப் தெரிந்து கொள்ளலாம்.

வெர்ச்யூ கான்ஸ்டெலேஷன் மொபைலில் எம்எஸ் ஆஃபீஸ் டாக்குமென்ட் வசதி உள்ளது. இந்த அழகிய வடிவமைப்பு கொண்ட மொபைலில் எதுவுமே அதிகம் தான் என்பதற்கு இதன் 3.5 என்எச்டி அமோல்டு திரையே உதாரணம்.

குறைந்த பிக்ஸல் அல்ல, இந்த போன் 8 மெகா பிக்ஸல் டியூவல் லெட் பிளாஷ் கேமராவுடன் களத்தில் இறங்க உள்ளது.

இந்த மொபைலில் 32ஜிபி மெமரி, எச்எஸ்டிபிஏ, வைபை போன்ற வசதிகளையும் பெற முடியும். பெரிய தொழில் அதிபர்களின் தனித்துவத்தை இந்த மொபைல் இன்னும் தாருமாறாக அதிகரித்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது.

இதில் ஏதோ ஒரு தனித்துவம் இருப்பதை வாடிக்கையாளர்களால் நிச்சயம் நன்கு உணர முடியும். வெர்ச்யூ கான்ஸ்டலேஷன் ஸ்டெய்ன் பிரவுன் மாடல் ரூ.3,08,498 ஒட்டிக் விலையிலும் ரெட் கோல்ட் மிக்ஸ்டு மெட்டல்ஸ் மாடல் ரூ.7,71,245 ஒட்டிய விலையிலும் கிடைக்கும்.

வெர்ச்யூ கான்ஸ்டெலேஷன் மொபைலின் தொழில் நுட்பமும், வசதியும் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot