இந்தியாவில் புதிய சொகுசு ஸ்மார்ட்போனை வழங்கும் வெர்ட்டு நிறுவனம்

சொகுசு மற்றும் ஆடம்பர மொபைல்களைத் தயாரித்து வரும் வெர்ட்டு நிறுவனம் தற்போது ஒரு புதிய அல்ட்ரா சொகுசு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த போனிற்கு கான்ஸ்டலேசன் ஸ்மைல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் டெல்லியில் தனது வெர்ட்டு பட்டிக் ஸ்டோரையும் திறந்து வைத்திருக்கிறது இந்த நிறுவனம்.
இந்த வெர்ட்டு கான்ஸ்டலேசன் ஸ்மைல் போன் நோக்கியாவின் சி7 சிம்பியன் ஸ்மார்ட்போனைப் போல் இருக்கும். ஆனால் இந்த போனில் அதிக விலை மதிப்புள்ள கல் மற்றும் உலோக செல்லும் இருக்கும்.
இந்த போன் 3.5 இன்ச் அளவில் ஒரு என்எச்டி அமோலெட் டிஸ்ப்ளைய் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயில் சாப்பியர் கிரிஸ்டல் கோட்டிங் உண்டு. இந்த போனின் பின்புறம் டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8எம்பி கேமரா உள்ளது. மேலும் இந்த போனில் 32ஜிபி மெமரி, எப்எம் ரேடியோ, ப்ளூடூத், வைபை மற்றும் 3ஜி இணைப்பு ஆகிய இணைப்பு வசதிகளை அனுபவிக்கலாம்.
மேலும் லண்டனின் சிம்பொனி ஆர்கஸ்ட்ரா வழங்கும் ரிங்டோன்களும் இந்த போனில் உள்ளன. இந்த போன் கோரல் சிவப்பு, கோரல் ஊதா, பெப்பிள் க்ரே மற்றும் அனிமோன் பர்ப்புள் ஆகிய 4 வண்ணங்களிப் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
இந்த போனைத் தொடர்ந்து வெர்ட்டு நிறுவனம் தனது ஸ்டோர்களை மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது. தற்போது இந்த போன் இந்தியாவில் உள்ள 2 ஸ்டோர்களில் கிடைக்கிறது.
உலக அளவில் வெர்ட்டு நிறுவனம் தனது 100 பட்டிக் ஸ்டோர்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் உலக அளவில் 500 கடைகள் வெர்ட்டு போன்களை விற்பனை செய்கின்றன.
வெர்ட்டு வழங்கி இருக்கும் மிகவும் அதிக விலை கொண்ட போன் எதுவென்றால் அது சிக்னேச்சர் கோப்ரா ஆகும். இந்த போன் 213,000 பவுண்டுகளுக்கு அதாவது ரூ.1.8 கோடிக்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
