40எம்பி கேம், 8ஜிபி ரேம் கொண்ட வெர்னீ அப்பல்லோ 2.!
இதென்ன.. கனவா நிஜமா.?
கடந்த ஆண்டு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான வெர்னீ அதன் 6ஜிபி ரேம் பதிப்பான அப்பல்லோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. அதனையடுத்து இம்மாத இறுதியில் நிகழும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அதன் 8ஜிபி ரேம் பதிப்பான வேர்னீ அப்பல்லோ ஸ்மார்ட்போனை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
மிக சுவாரஸ்யமாக வெர்னீ நிறுவனம் ஒரு படி மேலே சென்று அப்பல்லோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் பொருந்தியுள்ளது தான் இக்கருவியில் மிகவும் ஈர்க்கக்கூடியவொரு சேமிப்பு அம்சமாகும். உடன் இந்த கருவிதான் உலகின் முதல் 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமின்றி இக்கருவியின் பிற அம்சங்களும் அசத்தலாய் உள்ளன.!

அப்பல்லோ 2
கடந்த திங்களன்று ஒரு ட்விட்டர் பதிவில், ஹீலியோ எக்ஸ்30 செயலி மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆன இந்த அப்பல்லோ 2 தொலைபேசி எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் வெளியாகும் என்பதை வெர்னீ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ரேம்
மேலும் இக்கருவியின் சேமிப்பு அம்சம் சார்ந்த விளக்கத்தில் வெர்னீ அப்பல்லோ 2 கருவியானது 4ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு + 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு + 8ஜிபி ரேம் என இரண்டு மாறுபாடுகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

எஸ்ஓசி
தவிர இக்கருவியில் ஒரு க்யூஎச்ட்டி டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது சிப்செட்'டை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்30 எஸ்ஓசி கொண்டிருக்கலாம்.

உயர் சென்சார் திறன்
இம்மாதிரியான சிப்செட் ஆனது 40 மெகாபிக்சல்கள் போன்ற உயர் சென்சார் திறன் கொண்ட ஒரு கேமரா ஆதரவு வழங்கலாம், மேலும் 24 மெகாபிக்சல்கள் வீடியோ ஆதரவு வரை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனவு கருவி
ஒரு கனவு கருவியாக திகழும் இந்த வெர்னீ அப்பல்லோ 2 பற்றிய மேலும் பல அதிகாரப்பூர்வமான தகவல்களை பெற எம்டபுள்யூசி 2017 நிகழ்வின் அறிமுகம் வரை நாம் காத்திருக்க வேண்டும். மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.!

மேலும் படிக்க
நோக்கியா 3310, ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் (கான்செப்ட் வீடியோ).!


Click it and Unblock the Notifications