iPhone 14 மற்றும் iPhone 14 Plus மீது அதிரடி தள்ளுபடி.! பாதிக்கு பாதி குறைந்த விலை.! புது ரேட் இதான்.!
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவில் இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. எங்குத் திரும்பினாலும், காதலர் தின சிறப்புச் சலுகை.. காதலர் தின கம்போ தள்ளுபடி என்று ஆஃப்பர் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
அந்த வரிசையில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில், சமீபத்தில் வெளியான புத்தம் புது ஐபோன் (iPhone) சீரிஸ் மாடலான, ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ஆகிய மாடல்கள் மீது காதலர் தின சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடித் தள்ளுபடியில் கூட, நீங்கள் இவ்வளவு சலுகையைக் கண்டிருக்க முடியாது மக்களே. அந்த அளவிற்கு இந்த காதலர் தின சிறப்புத் தள்ளுபடியில் ஐபோன் மாடல்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கின்றன.

iPhone 14 மற்றும் iPhone 14 Plus மீது நம்ப முடியாத தள்ளுபடி.!
சரி, வாருங்கள் எந்த போன் மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறது? எத்தனை தள்ளுபடிகளுடன் புது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலைகளை நாம் வாங்க முடியும்? என்று பார்க்கலாம். இந்த காதலர் தினத்தன்று உங்கள் காதலன் அல்லது காதலியை நீங்கள் ஆச்சரியப்படுத்த விரும்பினால், இந்த அற்புதமான ஆஃபரை நீங்கள் தவறவிடவே கூடாது மக்களே.!
உங்கள் காதலர் தினத்தை நீங்கள் சிறப்பாக மகிழ்ந்து கொண்டாட, ஆப்பிள் தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரான iVenus மூலம் புது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) வாங்கும் நபர்களுக்கு அற்புதமான சலுகைகள் இப்போது கிடைக்கிறது. இந்த இரண்டு ஐபோன்களின் மீதும் iVenus இப்போது சில உடனடி கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. எந்த போனிற்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

iPhone 14 மீது கிடைக்கும் காதலர் தின சிறப்புத் தள்ளுபடிகள்
தற்போது, ஐபோன் 14 மாடலின் ஆரம்ப விலை ரூ.79,990 விலையில் வருகிறது. iVenus இந்த ஐபோனின் விலையை ரூ. 71,990 ஆகக் குறைத்துள்ளது. ஆம், உங்களுக்குக் காதலர் தின சிறப்புத் தள்ளுபடியாக ரூ. 8,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கு மேல் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,000 கூடுதல் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.
இத்துடன் சலுகை முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால் ரூ. 22,000 வரை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளும் வாய்ப்பையும் இந்த சிறப்புச் சலுகை வழங்குகிறது. இதனுடன், புது ஐபோன் 14 வாங்குபவர்களுக்கு ரூ. 8,000 வரை உறுதி செய்யப்பட்ட எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்த சலுகையையும் பயன்படுத்தினால், இந்த ஐபோன் 14 இன் விலையை ரூ.37,900 ஆக குறைக்க முடியும். இதை விடக் குறைந்த விலையில் ஐபோன் 14 கிடைக்க வாய்ப்பே இல்லை.

iPhone 14 Plus மீது கிடைக்கும் காதலர் தின சிறப்புத் தள்ளுபடி
மறுபுறம், பெரிய டிஸ்பிளேவுடன் வரும் ஐபோன் 14 பிளஸ் டிவைஸின் ஆரம்ப விலை ரூ.89,900 ஆக வருகிறது. இந்த காதலர் தின சிறப்புத் தள்ளுபடியாக, இந்த போன் மீது ரூ.9,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதனுடன், HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4000 கேஷ்பேக் மற்றும் ரூ.22,000 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் ரூ. 8,000 வரை உறுதிசெய்யப்பட்ட எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்குகிறது iVenus. இதன் மூலம் ஐபோன் 14 பிளஸ் சாதனத்தை வெறும் ரூ. 46,900 என்ற விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications