பிப்.14 காதலர் தின சலுகை.. பாதிக்கு பாதி விலை இல்லை.. அதவிட கம்மி.. 2 POCO போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்!
2024 ஆம் ஆண்டிற்கான காதலர் தினத்தை (Valentine's Day 2024) முன்னிட்டு போக்கோ (POCO) நிறுவனம் அதன் 2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் (Budget Smartphones) மீது பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் மீது என்ன டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது?
பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக போக்கோ சி55 (Poco C55) மற்றும் போக்கோ சி51 (Poco C51) ஸ்மார்ட்போன்கள் மீது "நம்ப முடியாத" அளவிலான நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சி55 மீதான தள்ளுபடி: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் உள்ள போஸ்டரின்படி போக்கோ சி55 ஸ்மார்ட்போன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.13,999 க்கு பதிலாக வெறும் ரூ.7,299 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகமாகும் போது போக்கோ சி55-ன் பேஸிக் 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.9,499 ஆகவும், 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.10,999 ஆகவும் இருந்தது.
போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) ப்ராசஸர் உடனாக 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட், டைம்லேப்ஸ், எச்டிஆர் மோட் உள்ளிட்ட பல கேமரா அம்சங்களும் உள்ளன.
முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயுஐ 13 கொண்டு இயங்கும் போக்கோ சி55 ஸ்மார்ட்போனானது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

போக்கோ சி51 மீதான தள்ளுபடி: அமேசான் இந்தியாவில் போக்கோ சி51 ஸ்மார்ட்போன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.10,999 க்கு பதிலாக வெறும் ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகமாகும் போது போக்கோ சி51-ன் பேஸிக் 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.8,499 ஆக இருந்தது.
டூயல் சிம் சப்போர்ட் உடன் வரும் போக்கோ சி51 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) கொண்டு இயங்குகிறது. இது 120ஹெட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.52 இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இதன் டிஸ்பிளேயில் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது. இது 4ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 8எம்பி மெயின் கேமரா + ஒரு டெப்த் சென்சார் உள்ளது.
முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மட்டுமே இருந்தாலும் கூட மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் உள்ளது. கடைசியாக, பேக் பேனலில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








