அர்பனியர் ஹெட்போன்... எளிமை புதுமை!

கில்ட்டட் பிளாட்டன் வரிசை ஹெட்போன்கள் அர்பனியர்ஸ் நிறுவனத்தின் முதல் ஹெட்போன்களாகும். இந்த ஹெட்போன்கள் 11 நிறங்களில் வருகிறது. இதன் ஹெட்பேண்ட் மற்றும் இயர் கப்புகள் மிக அழகாக உள்ளன. இந்த இயர் கப்புகள் காதுகளை முழுவதுமாக மூடிக் கொள்ளும்.
இந்த ஹெட்போனில் உள்ள சவுண்டு டிரைவர்கள் கைவினை செய்யப்பட்டதாகும். அதனால் அது மிக உயர்தரமாக இருக்கும். இது 3.5மிமீ ஆடியோ ஜாக்குகளைக் கொண்டுள்ளது. இதை எம்பி3 ப்ளேயர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் மிக எளிதாக இணைக்க முடியும்.
இந்த கில்டு ஹெட்போனின் டிரைவர்கள் 40மிமீ அளவைக் கொண்டுள்ளது. இதன் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் ஆகும். இதன் இம்பீடன்ஸ் 60 ஓம்களாகும். இந்த ஹெட்போனின் சென்சிட்டிவிட்டி 115 டிபி ஆகும். இதன் இன்புட் பவர் 40எம்டபிள்யூ ஆகும்.
இந்த கில்டு ஹெட்போன்களின் ஒலி அமைப்பு மிகத் தரமாக உள்ளது. இதன் பேஸ் இசையும் அற்புதமாக உள்ளது. இதன் விலை ரூ.4,000 ஆகும்.


Click it and Unblock the Notifications