Home
Mobile

ரெடியா இருங்க! டிச.14, 15-ல்.. பேக் டூ பேக் அறிமுகமாகும் 3 புதிய போன்கள்.. என்னென்ன மாடல்? என்ன விலை?

டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில், மூன்று வெவ்வேறு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. சுவாரசியமாக இம்மூன்று ஸ்மார்ட்போன்களுமே (Upcoming Smartphones) பட்ஜெட் பிரிவில் வெளியாக உள்ளன. என்னென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

01. ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G): ரியல்மியின் இந்த புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று ரியல்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி சி-சீரீஸின் முந்தைய மாடல்களை போலவே இதுவும் ரூ.11,000 முதல் ரூ.15,000 வக்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

டிச.14, 15-ல்... பேக் டூ பேக் அறிமுகமாகும் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்!

உறுதி செய்யப்பட்ட விவரங்களை பொறுத்தவரை, இது ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) மாடலில் இருப்பதை போலவே ரவுண்ட் கேமரா மாட்யூலை (Round Camera Module) கொண்டிருக்கும். அதில் டூயல் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி சி67 மாடலில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ ஐபிஎஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ4.0, 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

டிச.14, 15-ல்... பேக் டூ பேக் அறிமுகமாகும் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்!

02. லாவா யுவா 3 ப்ரோ 4ஜி (Lava Yuva 3 Pro 4G): லாவாவின் புதிய பட்ஜெட் விலை மாடலாக லாவா யுவா 3 ப்ரோ 4ஜி (Lava Yuva 3 Pro 4G) ஸ்மார்ட்போன் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரூ.10,999 க்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் HD+ டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎப்எஸ் 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ், யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 Chipset), ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்யலாம்.

டிச.14, 15-ல்... பேக் டூ பேக் அறிமுகமாகும் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்!

போக்கோ சி65 (Poco C65): கடந்த நவம்பரில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி65, டிசம்பர் 15 ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் போக்கோ சி65-யின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.10,700 க்கு அறிமுகமானது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் HD+ டிஸ்பிளே, ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு உடனான மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (Mediatek Helio G85 Chipset), 8ஜிபி வரை LPDDR4X ரேம், 256ஜிபி வரை eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 14 போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

இது தவிர 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 2-மெகாபிக்சல் சென்சார் டூயல் ரியர் கேமரா செட்டப், 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா, மைக்ரோ USB போர்ட் வழியாக 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) போன்றவைகளையும் கொண்டுள்ளது.

கூடிய விரைவில்.. இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro), ரியல்மி 12 ப்ரோ பிளஸ் (Realme 12 Pro Plus), விவோ எக்ஸ் 100 (Vivo X100), விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro), ஒன்பிளஸ் 12 (OnePlus 12), ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போன்றவைகளை கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones Realme C67 5G Poco C65 Lava Yuva 3 Pro 4G India Launch Dec 14 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X