அடுத்த வாரம் அறிமுகமாகும் 7 புதிய போன்கள்.. Motorola முதல் Vivo வரை.. இதோ லிஸ்ட்!
இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமாகி விட்ட காரணத்தால்.. இதற்கு மேல் மக்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் அதிகமாக இருக்காது என்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றிலும் தவறு.
கடந்த பல வாரங்களை போலவே.. வரும் வாரமும் கூட பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. செப்.19 முதல் செப்.22 ஆம் தேதிக்குள்ளாக மொத்தம் 5 ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தத்தம் புதிய மாடலகளை இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளன.

அடுத்த வாரம் மொத்தம் 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றின் மாடல் பெயர்கள் என்ன? அவைகள் எந்தெந்த தேதிகளில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த 7 போன்களில் எந்தெந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகும்? இதோ விவரஙகள்:
1. ஹானர் பர்ஸ் வி (Honor Purse V): ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், ஹூவாய் மேட் எக்ஸ்எஸ் சீரீஸ் போன்று வெளிப்புறமாக மடிக்கக்கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகும். இது வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று ஹானர் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹானர் பர்ஸ் வி ஸ்மார்ட்போனானது ஏஓடி (AOD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display), குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் (Qualcomm Snapdragon 778G SoC), 35W சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo): இது வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகமாகிவிட்டதால், அதே வேரியண்ட் தான் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 7030 சிப்செட், 68W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, 6.55-இன்ச் FHD+ 144Hz கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 50MP மெயின் கேமரா, 32MP செல்பீ கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஐபி68 ரேட்டிங் போன்றவைகளை பேக் செய்யும்.
3. ரெட்மி நோட் 13 சீரீஸ் (Redmi Note 13 Series): இது வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரெட்மி நோட் 12 சீரிஸ் இங்கே வாங்க கிடைக்கின்றன. ஆக கண்டிப்பாக நோட் 13 சீரீஸ் இந்தியாவிலும் அறிமுகமாகும்.
இந்த சீரிஸின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்: ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G). முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதில் 1.5கே OLED கர்வ்டு டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 7200-அல்ட்ரா சிப் போன்றவைகளை பேக் செய்யலாம்.
4. விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G): இது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான விவோ டி2எக்ஸ் 5G மற்றும் விவோ டி2 5ஜி மாடலை விட அம்சங்களிலும், விலை நிர்ணயத்திலும் "உயர்ந்ததாக" இருக்கும் என்பதில் சந்தேகேம வேண்டாம்.
டீஸர்கள் மற்றும் லீக்ஸ் வழியாக கிடைத்த தகவல்களின்படி, இது ஐக்யூ இஸட்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும். அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட், ஆரா லைட், 66W சார்ஜிங் ஆதரவு மற்றும் பலவற்றுடன் வரும்.
5. டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் (Tecno Phantom V Flip): டெக்னோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான இது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவிற்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இது ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டிருக்கும், இதன் ரிங் கேமரா அமைப்பிற்குள் வட்ட வடிவிலான கவர் டிஸ்பிளே இடம்பெறும். மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 6.75 இன்ச் 144 ஹெர்ட்ஸ் மெயின் டிஸ்ப்ளே, 1.39 இன்ச் செகண்டரி ஸ்கிரீன், மீடியாடெக் டைமென்சிட்டி 8050 சிப்செட், 64எம்பி மெயின் கேமரா மற்றும் 45W சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications