Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. ஆக. 5, 6, 7-ல் அறிமுகமாகும் 6 வெயிட்டான போன்கள்.. என்னென்ன மாடல்கள்? என்ன விலை?

ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு 2024 ஆகஸ்ட் (2024 August) மாத ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் போக்கோ, மோட்டோரோலா மற்றும் ஹானர் ஆகிய 3 நிறுவனங்களும் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. போக்கோ நிறுவனம் அதன் எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) மாடலையும், மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் 50 (Motorola Edge 50) மாடலையும், ஹானர் நிறுவனம் அதன் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro) மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தன.

2024 ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள நாட்களிலும் பல முக்கிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) அறிமுகம் செய்யப்படவுள்ளன. அந்த பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரீஸ் (Google Pixel 9 series) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) மாடல்களும் உள்ளன. ஆனால் இது ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் (ஆகஸ்ட் 13) தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

நல்ல மாசம் பொறக்குது.. ஆக. 5, 6, 7-ல் அறிமுகமாகும் 6 வெயிட்டான போன்கள்

அதற்கு முன்பாக, அதாவது அடுத்த வாரம் (ஆகஸ்ட் 5 - 7 ஆம் தேதிக்குள்) இன்னும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் (இந்தியா மற்றும் உலகளவில்) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அப்படியாக எந்தெந்த நிறுவனங்கள்.. எந்தெந்த தேதிகளில்.. என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன? அவைகள் என்ன விலைக்கு வரும்? என்கிற பட்டியல் இதோ:

01. இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி (Infinix Note 40x 5G): இன்பினிக்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. ஹூவாய் நோவா ஃபிளிப் (Huawei Nova Flip): ஹூவாய் நிறுவனம் ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று ஹூவாய் நோவா ஃபிளிப் என்று அழைக்கப்படும் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை (Foldable Smartphone) சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition): ஒன்பிளஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ரூ.1,45,000 - ரூ.1,50.000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஓப்பன் தற்போது ரூ.1,39,999-க்கு வாங்க கிடைக்கிறது.

04. விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ (Vivo V40, Vivo V40 Pro): விவோ நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இவைகள் முறையே ரூ.37,999 மற்றும் ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

05. ரியல்மி 13 4ஜி (Realme 13 4G): ரியல்மி நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ரியல்மி 13 4ஜி ஸ்மார்ட்போனை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது நிச்சயம் இந்திய சந்தைக்கும் வரும். ஏனென்றால் ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. ரியல்மி 13 4ஜி ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones Next Week Infinix Note 40x 5G to OnePlus Open Apex Edition Launching Aug 5 6 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X