Home
Mobile

அடுத்த வாரம்.. சம்பவம் செய்யப் போகும் 2 போன்கள்.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

செல்போன் நிறுவனங்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் அதிநவீன 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன செல்போன் நிறுவனங்கள்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அடுத்த வாரம் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது ஐக்யூ மற்றும் ஆசஸ் நிறுவனங்கள் தான் புதிய போன்களை களமிறக்க உள்ளன. இப்போது அந்த புதிய போன்கள் மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அடுத்த வாரம்.. சம்பவம் செய்யப் போகும் 2 போன்கள்.. எந்த மாடல்?

மார்ச் 12: ஐக்யூ நிறுவனம் வரும் மார்ச் 12-ம் தேதி ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட்9 5ஜி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான ஐக்யூ இசட்9 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள்(iQOO Z9 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

6.64 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ இசட்9 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இதன் டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதேபோல் ஐக்யூ இசட்9 5ஜி போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 14: ஆசஸ் நிறுவனம் தனது ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 14-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா அம்சங்கள் (Asus Zenfone 11 Ultra specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அடுத்த வாரம்.. சம்பவம் செய்யப் போகும் 2 போன்கள்.. எந்த மாடல்?

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

6.78-இன்ச் சாம்சங் அமோலெட் (Samsung AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா. பின்பு இந்த டிஸ்பிளேவில் 2,400 x 1,080 பிக்சல்ஸ், 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.. குறிப்பாக இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

அடுத்த வாரம் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ( Upcoming Smartphones) கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones next week: Asus Zenfone 11 Ultra and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X