Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. இந்த அக்டோபரில் அறிமுகமாகும் 6 அட்டகாசமாக புது போன்கள்.. எதை வாங்க போறீங்க?

2025 அக்டோபர் மாதம் பிறந்து விட்டது. "ஆண்டவா.. இந்த மாசமாவது ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்கனும்" என்று அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் காலடி எடுத்துவைத்துள்ள பலருக்கும் நிச்சயமாக இதுவொரு நல்ல மாதமாக இருக்கும். ஏனென்றால் இம்மாதம் சில-பல தரமான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இம்மாதம் - மொத்தம் 5 நிறுவனங்களிடம் இருந்து 6 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி தான். இதோடு "இந்த அக்டோபர் 2025 (October 2025) இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்?" என்கிற பட்டியலும் எங்களிடம் உள்ளது. முதலில் அந்த "6 ஸ்மார்ட்போன்களை" பற்றி பார்த்துவிடலாம்!

இந்த அக்டோபரில் அறிமுகமாகும் 6 அட்டகாசமாக புது போன்கள்!

1. ஒன்பிளஸ் 15 (OnePlus 15): முன்னதாக 2025 டிசம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு, சற்று முன்பாகவே, இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட உள்ளது. குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டிற்கு இருக்கும் போட்டி காரணமாக இது முடிந்த வேகத்தில் சீனாவில் அறிமுகமாகும்; பின் இந்தியாவிற்கும் வரும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 165ஹெர்ட்ஸ் டிஸ்பிளே இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் முந்தைய மாடல்களில் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்கள் இடம்பெற்றன

மேலும் இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ்16 (ColorOS 16) உடன் அறிமுகமாகும் என்றும் ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை இது முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட "காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" (மினி ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 13 மாடலை போலவே இருக்கும்.

2. ஷாவ்மீ 17 (Xiaomi 17): கடந்த வாரம் நடந்த ஸ்னாப்டிராகன் சம்மிட் க்ளோபல் ஹைலைட்ஸ் மீட்டில் (Snapdragon Summit Global Highlights Meet) ஷாவ்மீ நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மீ 17 மாடலின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இது சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 சீரிஸின் ஒரு பகுதியாகும். இது விரைவில் மற்ற சந்தைகளுக்கும் வரவுள்ளது. ஒன்பிளஸ் 15 மாடலை போலவே இதுவும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கும் இன்னொரு ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஷாவ்மீ 17 சைனீஸ் வேரியண்ட் ஆனது 6.3-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் 7000mAh பேட்டரியுடன் வருகிறது.

3. விவோ வி60இ (Vivo V60e): இது அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ வி50இ ஸ்மார்ட்போனின் "வாரிசாக" அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இது 50 மெகாபிக்சல் (மெயின்) + 8 மெகாபிக்சல் (அல்ட்ரா-வைட்) டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் என்று விவோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போனில் டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் பாதுகாப்புடன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே இருக்கலாம் என்று டீஸர்கள் தெரிவிக்கின்றன. கூடவே ஐபி68 + ஐபி69 ரேட்டிங், 90W ஃப்ளாஷ்சார்ஜ் ஆதரவுடன் 6,500 எம்ஏஎச் பேட்டரியும் இடம்பெறலாம்.

4. ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடிஷன் (Realme 15 Pro 5G Game of Thrones Edition): கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் இம்மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடிஷன் என அழைக்கப்படும்

இது ஸ்டாண்டர்ட் எடிஷன் உடன் ஒப்பிடும்போது "ஒப்பனை சார்ந்த மாற்றங்களை மட்டுமே" கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக 6.8-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 கே = ஜென் 4 சிப்செட், டூயல் 50-மெகாபிக்சல் ரியர் கேமரா, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரி மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்ஸ் ஆகிய அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்

5. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series): இது அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்கீழ் பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்களுடன் வரும். பைண்ட் எக்ஸ்9 மாடல்களில் 7025mAh பேட்டரி உறுதி செய்யப்பட்டுள்ளது; அதே நேரத்தில் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் 7,500mAh பேட்டரியுடன் வரும்.

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களை தவிர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்?
- ஹானர் மேஜிக் 8 சீரீஸ் (Honor Magic 8 Series)
- விவோ வி300 சீரீஸ் (Vivo V300 Series)
- ஹானர் மேஜிக் வி6 (Honor Magic V6)
- ஐக்யூ 15 (iQOO 15)
- ரியல்மி பி3 லைட் 4ஜி (Realme P3 Lite 4G)
- ரியல்மி ஜிடி 8 சீரீஸ் (Realme GT 8 Series)
- மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air)

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones New Mobile Phone Launches in October 2025 OnePlus 15 Xiaomi 17 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X