இந்த வாரம் ஒரு பிரளயமே இருக்கு: ஒன்னு, ரெண்டு இல்ல.. நீங்க மட்டும் தயாரா இருங்க!

|

ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களும் வெவ்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் புதுப்புது அம்சங்களோடு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

இதில் எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்பதில் பயனர்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படுகிறது. இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யவே நாங்கள் இருக்கிறோம்.

ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

மலிவு விலை முதல் ப்ரீமியம் விலை வரையிலான ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

மலிவு விலை முதல் ப்ரீமியம் விலை

மலிவு விலை முதல் ப்ரீமியம் விலை

செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மொத்தம் ஆறு ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

மலிவு விலை முதல் ப்ரீமியம் விலைப் பிரிவு வரை அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை பிஸியாக வைத்திருக்க போகிறது.

ஸ்மார்ட்போன்கள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக இந்த பட்டியல் அமையப்போகிறது என்பதில் ஆச்சரியமில்லை.

Motorola, Realme மற்றும் iQoo

Motorola, Realme மற்றும் iQoo

ஆகஸ்ட் மாதம் போல் இல்லாமல் இந்த மாதத்தில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது.முன்னதாக இந்த மாதத்தில் ப்ரீமியம் சாதனமாக ஆப்பிள் ஐபோன் மாடல்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த வாரம் 6 ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது. வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் ஆறு ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ், ரியல்மி ஜிடி நியோ 3டி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகமாக இருக்கிறது.

இந்த பட்டியலில் Motorola, Realme மற்றும் iQoo நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

மோட்டோரோலா நிறுவனம் ப்ரீமியம் விலை பிரிவின் கீழ் புது ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அது Motorola Edge 30 Ultra ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியாகும் ஏணைய ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இந்த சிப்செட் தான் இடம்பெற்றிருக்கிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு தனித்துவ அம்சம் இருக்கிறது. அது 200MP கேமராக்கள் ஆகும். இந்தியாவில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என கூறப்படுகிறது.

125W ஃபாஸ்ட் சார்ஜிங்

125W ஃபாஸ்ட் சார்ஜிங்

200MP கேமராக்கள், 144Hz டிஸ்ப்ளே, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் பிரத்யேகமாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000க்கு கீழ் நிர்ணயிக்கப்படலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனும் எட்ஜ் 30 அல்ட்ராவுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஸ்மார்ட்போனும் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் 144Hz P-OLED டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Realme Narzo 50i Prime

Realme Narzo 50i Prime

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 13 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Unisoc T612 SoC மூலம் இயக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். Realme C30s இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

Realme C30s

Realme C30s

Realme C30s ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 14 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது HD+ டிஸ்ப்ளே உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் Unisoc T612 SoC மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

IQoo Z6 Lite 5G

IQoo Z6 Lite 5G

IQoo Z6 Lite 5G ஆனது நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிப்செட் உடன் இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம் மற்றும் 50 எம்பி கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதி ரூ.15,000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme GT நியோ 3T

Realme GT நியோ 3T

Realme GT நியோ 3T ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செப்டம்பர் 16 அம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

ரியல்மி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் இதுவாகும். 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 SoC மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.30,000 விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones: More than 6 Smartphones Confirmed to Launching this week

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X