Home
Mobile

10080mAh பேட்டரி போன் முதல் புது OnePlus மாடல் வரை.. ஜன.5 - 8 க்குள் அறிமுகமாகும் 10 புது போன்கள்!

இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் உள்ள ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஜனவரி 2026 ஒரு உற்சாகமான மாதமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் பல பிராண்டுகள் தங்கள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்க (Upcoming Smartphones)ளை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய தயார் ஆக உள்ளன; தயாராகி வருகின்றன.

ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) - ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகம்: நீங்கள் ஒரு ஒன்பிளஸ் ஆர்வலராக இருந்தால், வரவிருக்கும் ஒன்பிளஸ் டர்போ 6 சீரீஸ் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் டர்போ 6வி (Turbo 6V) ஆகிய மாடல்களை உள்ளடக்கிய இந்த சீரீஸ் ஜனவரி 8 ஆம் தேதி சீனாவில் சீனாவில் அறிமுகமாக உள்ளது.

ஜன.5 - 8 க்குள் அறிமுகமாகும் 10 புது போன்கள்!

பின்னர் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். ஸ்டாண்டர்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், 165 ஹெர்ட்ஸ் மற்றும் 1.5கே டிஸ்பிளேவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 80W வயர்டு மற்றும் 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

ஹானர் பவர் 2 (Honor Power 2) - ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம்: பேட்டரி லைஃப் மற்றும் ஸ்ட்ரீமிங் டைமை பற்றி அதிகம் அக்கறை கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் ஹானர் பவர் 2 மாடலுக்காக காத்திருக்கலாம். இது ஜனவரி 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 10,080mAh பேட்டரியுடன் வரும். ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது 22 மணிநேரம் வரை ஷார்ட் வீடியோ பிளேபேக் நேரத்தையும், ஒரே சார்ஜில் 14.2 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 8,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.79 இன்ச் LTPS பிளாட் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். இந்த போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் இடம்பெறலாம்.

ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) - ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம்: இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்

ரியல்மி 16 ப்ரோ சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் ரியாத் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். மேலும் இது 7000mAh பேட்டரி மற்றும் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் OLED டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (Oppo Reno 15 Series) - ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது: இந்த சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15, ஒப்போ ரெனோ 15 ப்ரோ, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

நம்பகமான டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவ் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒப்போ ரெனோ ப்ரோ 15 ஸ்மார்ட்போனின் பாக்ஸ் லீக் ஆகியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அபிஷனின் விலை ரூ.64,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் பாக்ஸ் விலைகள் பொதுவாக ரீடெயில் விலையை விட அதிகமாகவே இருக்கும்.அதன்படி பார்த்தால் ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று குறிப்பிட்ட லீக்கர் நம்புகிறார். கூடுதலாக ஒப்போ நிறுவனம் சில அறிமுகசலுகைகளையும் (வங்கி தள்ளுபடி) வழங்கக்கூடும். ஆக இந்த ஸ்மார்ட்போனின் "ஃபைனல் ப்ரைஸ்" இன்னும் குறையும்.

போக்கோ எம்8 சீரீஸ் (Poco M8 Series) - ஜனவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஒப்போ ரெனோ 16 சீரீஸை போலவே, போக்கோ எம்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த சீரீஸில் போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) மற்றும் போக்கோ எம்8 ப்ரோ 5ஜி (Poco M8 Pro 5G) என்கிற 2 மாடல்கள் இருக்கலாம்.

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது? சாம்சங் (Samsung) நிறுவனம் பிப்ரவரியில் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26) சீரீஸை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதேபோல், ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விவோ வி70 (Vivo V70) ஸ்மார்ட்போனும் அதே நேரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக அப்டேட்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones January 2026 OnePlus Turbo 6 Honor Power 2 Realme 16 Pro Oppo Reno 15 Poco M8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X