நல்ல மாசம் பொறக்குது.. ஏப்.2 முதல் ஆரம்பம்.. 12 புது போன்கள் அறிமுகம்.. OnePlus, Realme, Redmi வரிசை கட்டுது!
ஏப்ரல் 2026 ஆனது ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்கான ஒரு அற்புதமான மாதமாக அமையவிருக்கிறது. ரியல்மி, ஷாவ்மீ, விவோ, ஒன்பிளஸ், ஒப்போ, ஐக்யூ, ஏஐ பிளஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள்- பட்ஜெட் விலையில், மிட்ரேன்ஜ் விலையில் மற்றும் பிளாக்ஷிப் பிரிவுகளில் தத்தம் புதிய மற்றும் லேட்டஸ்ட் ஸ்மாட்போன் (Upcoming Smartphones) மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.
முதலில் - ஏப்ரல் 2026 இல் எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த தேதிகளில், என்னென்ன ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள என்கிற பட்டியலை பார்ப்போம். பின்னர் ஏப்ரல் 2026 இல் சீனாவில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்கிற விவரங்களை பார்ப்போம். இவ்விரு சந்தைகளிலும் மொத்தம் 11 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பவுள்ளன.

1. ரியல்மி 16 5ஜி - ஏப்ரல் 2 அன்று அறிமுகம்: ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 2, 2026 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 60W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 7.0, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.
2. ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி - ஏப்ரல் 2 அன்று அறிமுகம்: ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி, அதன் ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகமான சிறிது நேரத்திலேயே இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. விவோ வி70 எப்இ - ஏப்ரல் 2 அன்று அறிமுகம்: விவோ வி70 எப்இ 5ஜி மாடலும் கூட ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று தான் இந்தியாவில் அறிமுகமாகிறது. பெயர் குறிப்பிடுவதை போலவே இது விவோவின் வி சீரிஸ் வரிசையில் வரும் முதல் "ஃபேன் எடிஷன்" (Fan Edition) ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 7,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
4. ஒன்பிளஸ் நோர்ட் 6 - ஏப்ரல் 7 அன்று அறிமுகம்: ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 165Hz டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், 9000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை பேக் செய்யும்.
5 & 6. ஏஐ பிளஸ் நோவா 2 சீரிஸ் - ஏப்ரல் 9 அன்று அறிமுகம்: ஏஐ பிளஸ் நிறுவனமானது, ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அல்ட்ரா வேரியண்ட் ஆனது பேக் பேனலில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லைட் ரிங்குடன் தனித்து நிற்கும்.
7. விவோ டி5 ப்ரோ 5ஜி - ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம்: விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் மாத மத்தியில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.30,000 க்கும் சற்று அதிகமாகவும், பெரும்பாலும் ரூ.35,000 க்கும் குறைவாகவும் இருக்கலாம். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 9020mAh பேட்டரி, IP68 மற்றும் IP69+ ரேட்டிங் ஆகியவைகள் இடம்பெறலாம்
8. ஐக்யூ இஸட்11 - ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்: சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 165Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் OTG ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் 9020mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும்.
9 & 10. ஒப்போ கே15 ப்ரோ சீரிஸ் - ஏப்ரல் 1 அன்று சீனாவில் அறிமுகம்: ஒப்போ கே15 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்டாண்டர்ட் மாடல், 6.59-இன்ச் 1.5K OLED டிஸ்பிளே, டைமென்சிட்டி 8500 சிப்செட். 7500mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைஎண்ட் மாடலில் 6.78-இன்ச் 1.5K LTPS OLED டிஸ்பிளே, டைமென்சிட்டி 9500s சிப்செட், 8000mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம்.
11. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா - சீனாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்: ஒப்போ நிறுவனம், தனது ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 16GB வரை ரேம், டூயல் 200MP சென்சார்கள், 7050mAh பேட்டரி, 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களை பேக் செய்யலாம்.
12. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் - ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டும் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 12GB ரேம், 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 7025mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








