Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. ஜூலை 2025 இல் அறிமுகமாகும் டாப் 8 ஸ்மார்ட்போன்கள்.. Nothing முதல் OnePlus வரை!

2025 ஜூன் மாதம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஜூலை மாதம் நெருங்கி வருகிறது. 2025 ஜூலை மாதத்தில் குறைந்தது 8 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில மாடல்களின் வெளியீட்டு தேதி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நத்திங் தொடங்கி சாம்சங் வரை.. ரூ.20,000 தொடங்கி ரூ.2 லட்சம் வரை.. ஒரு பெரிய ஸ்மார்ட்போன் பட்டாளமே காத்திருக்கிறது! ஒருவேளை நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால்.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் ஆகிறது? என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்கிற விவரங்கள் இதோ.

ஜூலை 2025 இல் அறிமுகமாகும் டாப் 8 ஸ்மார்ட்போன்கள்!

1. நத்திங் போன் 3 (Nothing Phone 3): இது ஜூலை 1, 2025 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் சிப்செட், சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கை மற்றும் நத்திங் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான கிளிஃப் இன்டர்பேஸ்-க்கான "மாற்று" ஆகியவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆசஸ் ஆர்ஓஜி சீரீஸ் போன்களை போன்ற ரியர் பேனலில் ஒரு புதிய எல்இடி எலிமெண்ட் இருக்கும்.நத்திங் நிறுவனம் இதை "கிளிஃப் மேட்ரிக்ஸ்" இன்டர்பேஸ் என்று அழைக்கிறது. இது முந்தைய நத்திங் ஃபோன் 2 மற்றும் ஃபோன் 1 மாடல்களிலிருந்து வேறுபடும் என்பதையும் வெளிப்படுத்திஉள்ளது.

ஜூலை 2025 இல் அறிமுகமாகும் டாப் 8 ஸ்மார்ட்போன்கள்!

கிளிஃப் எல்இடி இன்டர்பேஸ்-க்கு பதிலாக, நத்திங் போன் 3 மாடலின் பேக் பேனலின் மேல் வலது மூலையில் டாட்-மேட்ரிக்ஸ் பேனல் அமைந்துள்ளது போல் தெரிகிறது. இந்த கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது அனிமேஷன்கள், கால் நோட்டிஃபிகேஷன்கள், பேட்டரி ஸ்டேட்டஸ், நேரம் மற்றும் பிற ரீமைண்டர்களை காண்பிக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) கொண்டு இயங்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. மேலும் 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 மற்றும் 3. விவோ எக்ஸ் போல்ட் 5 (Vivo X Fold 5) மற்றும் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE): விவோ நிறுவனம் வருகிற ஜூலை 10, 2025 அன்று இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் விவோ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை.

குறிப்பாக விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ்30 மினி (Vivo S30 Pro Mini) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 10 பிட் கலர் டெப்த் உடனான 6.31-இன்ச் LTPO OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள்ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சோனி IMX921 சென்சார் உடனான ப்ரைமரி கேமரா, 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம்.

முன்பக்கத்தில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6500mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இந்தியாவில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஜூலை 2025 இல் அறிமுகமாகும் டாப் 8 ஸ்மார்ட்போன்கள்!

4 மற்றும் 5. ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE 5): ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஆகிய 2 மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் மாடல்களை வருகிற ஜூலை 8, 2025 அன்று அறிமுகப்படுத்த உள்ளது

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) கொண்டு இயக்கப்படலாம்

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350) கொண்டு இயக்கப்படலாம்

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7100mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

6, 7 மற்றும் 8. சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Samsung Galaxy Z Flip 7 FE): இந்த 3 ஸ்மார்ட்போன்களும் ஜூலை 10, 2025 அன்று நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones in July 2025 Nothing Phone 3 OnePlus Nord 5 Samsung Galaxy Z Fold 7 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X