Home
Mobile

வெயிட் பண்ணி அடிங்க.. 1 இல்ல 2 இல்ல.. வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

2025 ஜூலை மாதம் ஆனது - இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஒரு உற்சாகமான மாதமாக இருக்கும். ஏனென்றால் ஜூலை 2025 இல் பல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியாக ஜூலை 2025 இல் எந்தெந்த லேட்டஸ்ட் மற்றும் புதிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones July 2025).. சரியாக எந்தெந்த தேதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

1. நத்திங் போன் 3 - ஜூலை 1 அறிமுகம் ஆகிறது: நத்திங் போன் 3 மாடலில் பழைய கிளிஃப் இன்டர்பேஸ்-க்கு பதிலாக புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் டிசைன் மில்க் (Design Milk) உடனான ஒரு நேர்காணலில், நத்திங் நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஆன ஆடம் பேட்ஸ் கிளிஃப் மேட்ரிக்ஸ் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவருடைய கூற்றுப்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது கிளிஃப் இன்டர்பேஸ்-ன் கஸ்டமைசேஷனை தக்கவைத்து கொள்ளவும், அதை மிகவும் திறமையாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேக் பேனலின் மேல் வலது மூலையில் வட்டமாக தோன்றும் சிறிய கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது முந்தைய மாடல்களில் காணப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸ்-ன் பெரிய எல்இடி லைட் ஸ்ட்ரிப்களை மைக்ரோ-எல்இடிகளின் சிறிய கிளஸ்டர் கொண்டு மாற்றுகிறது.

வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

இதுதவிர்த்து நத்திங் போன் 3 மாடலில் குவால்காம் நிறுவனத்தின்ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எவ்வாறு சிறந்த ஜிபியு, என்பியு, ஐபிஎஸ், கனெக்டிவிட்டி மற்றும் டீபால்ட் சாஃப்ட்வேர் அப்டேட்டை கொண்டுள்ளது என்றும் ஆகையால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும் என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.

விலையை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் கூற்பட்டபடி ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. மாறாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதாவது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஒன்பிளஸ் நோர்ட் 5 - ஜூலை 8 அறிமுகம் ஆகிறது: ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் இடம்பெறும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் ​ கேமரா செட்டப் குறித்த அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள்: இது டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும் என்பதையும், அதில் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் 116-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சாரை கொண்ட செல்பீ கேமரா இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 60fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். மேலும் ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ (LivePhoto) அம்சத்தையும் ஆதரிக்கும். இதன் விலை ரூ.30,000 க்குள் இருக்கலாம்.

3. ஒன்பிளஸ் நோர்ட் CE5 - ஜூலை 8 அறிமுகம் ஆகிறது: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2392 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டிருக்கலாம் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இதன் விலையும் ரூ.30,000 க்குள் இருக்கலாம்.

4 மற்றும் 5. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 - ஜூலை 9 அறிமுகம் ஆகிறது: நியூவேமொபியல் (NieuweMobiel) வழியாக கிடைத்த அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவைகள் இத்தாலிய ஆன்லைன் சில்லறை விற்பனை தளத்தில் முறையே க்யூ7 மற்றும் பி7 என்ற குறியீட்டு பெயர்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

இதன்படி இத்தாலியில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 2,227.71 யூரோ (தோராயமாக ரூ.2,23,000) மற்றும் 512ஜிபி ஆப்ஷன் 2,309.03 யூரோ (தோராயமாக ரூ.2,31,100) என்கிற விலை நிர்ணயத்தை பெறும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் 512ஜிபி ஆப்ஷன் 1,425.51 யூரோ (தோராயமாக ரூ.1,43,000) என்கிற விலைக்கு வரும்.

6. விவோ எக்ஸ்200 எஃப்இ - ஜூலை நடுப்பகுதி அறிமுகம் செய்யப்படலாம்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் 1.5K LTPO OLED டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர், 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

வர்ற ஜூலை மாசம் அறிமுகமாகும் 6 அல்டிமேட் போன்கள்.. இதோ லிஸ்ட்!

நினைவூட்டும் வண்ணம் இது சீனாவில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான மாடலாகும். சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி + ரேம் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இது எப்படியும் ரூ.50,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones in July 2025 Nothing Phone 3 OnePlus Nord 5 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X