Home
Mobile

2024 ஜூலையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட் இதோ.. Moto, CMF முதல் Samsung, Redmi வரை!

இந்த பருவமழை காலத்தில்.. பல பெரிய பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகமும் மழையாய் பொழியப்போகிறது. ஜூன் மாதத்தை போலவே 2024 ஜூலை மாதத்திலும் கூட.. பட்ஜெட், மிட்-ரேன்ஜ், பிரீமியம் பிளாக்ஷிப் என பல்வேறு விலைப்பிரிவுகளின் கீழ் பல புதிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones in July 2024) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அப்படியாக ஜூலை 2024 இல் எந்தெந்த நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன? அவைகள் எந்தெந்த தேதிகளில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

1. மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra): சீன அறிமுகத்தை தொடர்நது இது ஜூலை 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 6.9-இன்ச் மடிக்கக்கூடிய FHD+ 120Hz LTPO OLED இன்டர்னல் ஸ்கிரீன் மற்றும் 4-இன்ச் P-OLED 90Hz எக்ஸ்டர்னல் ஸ்க்ரீன், எஸ்டி 8எஸ் ஜென் 3 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

2024 ஜூலையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட்!

மேலும் இது 4000mAh பேட்டரி, 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப், IPX8 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.70,000 - ரூ.80,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

2. சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1): இது ஜூலை 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் ஸ்மார்ட் டயல் (Smart Dial) என்று அழைக்கப்படும் ஒரு டயல்-ஐ காணமுடிகிறது. இது மீடியா பிளேபேக் மற்றும் சவுண்டை கண்ட்ரோல் செய்ய பயன்படுத்தப்படலாம். அத்தவாயு பழைய ரேடியோவில் உள்ள வால்யூம் அல்லது சவுண்ட் கண்ட்ரோலர்-ஐ போல இது செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஜூலையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட்!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யப்படலாம்.

பேட்டரியை பொறுத்தவரை, இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 உடன் அனுப்பப்படலாம். விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ரூ.17.999 முதல் ரூ.18,999 க்குள் விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

2024 ஜூலையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட்!

3. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இது ஜூலை 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) இருப்பதாக ரெட்மி பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடன் 5ஜி ஸ்மார்ட்போனின் பிரிவில் வெளியாகும் மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட்போன் என்றும் இது விளம்பரப்படுத்தப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, இது அட்வான்ஸ்டு 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்ட 5030mAh பேட்டரிஏய் பேக் செய்யும். கடைசியாக, இது ஹைப்பர்ஓஎஸ் (அவுட்-ஆப்-பாக்ஸ்) உடன் வரும். இதுதவிர்த்து வேறெந்த அம்சங்களும் டீஸ் செய்யப்படவில்லை. விலையை பொறுத்தவரை, இது ரூ.12,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஜூலையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட்!

4. சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Flip 6 and Z Fold 6): இது ஜூலை 10 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி இஸட் பிளிப் 6 ஆனது புதிய எஸ்டி 8 ஜென் 3 சிப், பெரிய 4,000mAh பேட்டரி, ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்கள், 50-மெகாபிக்சல் மெயின் கேமரா போன்றவைகளை கொண்டிருக்கும்.

மறுகையில் உள்ள கேலக்ஸி இஸட் போல்ட் 6 ஆனது விவோ, ஒன்பிளஸ் மற்றும் கூகுளின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களை சமாளிக்கும் வண்ணம், முந்தைய மாடல்களை போல் இல்லாமல் பெரிய அளவிலான அப்கிரேட்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் இடம்பெறலாம்.

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஜூலை 2024 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும்சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் எங்களிடம் உள்ளன. அதில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4), விவோ வி40 சீரீஸ் (Vivo V40 series), ஹானர் 200 5ஜி (Honor 200 5G) மற்றும் மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஆகியவைகளும் அடக்கம்.

ஆரம்பத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது ஜூன் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகமானது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடல் அறிமுகமானது. ஆக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது ஜூலையில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

இதேபோல மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி85 5ஜி ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அடுத்தது இந்திய அறிமுகம் தான். ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போனின்12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாகா ரூ.31,275 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Smartphones in July 2024 Redmi 13 5G CMF Phone 1 Samsung Galaxy Z Flip 6 Fold 6 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X