OnePlus முதல் Oppo வரை.. இந்த மார்ச் மாதம் முடிவதற்குள் அறிமுகமாக உள்ள 6 புதிய போன்கள்!
இந்த 2203 மார்ச் மாதத்தில் இன்னும் நிறைய புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் சில போன்களின் வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டன. அப்படியாக இந்த மாதம் முடிவதற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள 6 புதிய போன்களின் பட்டியல் இதோ:
முன்னரே குறிப்பிட்டபடி ஒப்போ (OPPO), மோட்டோரோலா (Motorola), சாம்சங் (Samsung), ஐக்யூ (IQOO) போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரும் சில புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அவைகளுடன் சேர்ந்து வேறு சில புதிய போன்களும் கூட இந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் (Oppo Find N2 Flip) வருகிற மார்ச் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 6.8-இன்ச் மெயின் டிஸ்பிளேவுடன் 3.26-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும். 50எம்பி மெயின் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமராவுடன் வரும் இதில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4300mAh பேட்டரியும் இருக்கும்.
மோட்டோ எக்ஸ்40
மோட்டோரோலாவின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக மோட்டோ எக்ஸ்40 (Moto X40) வருகிற மார்ச் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் டிஸ்ப்ளே, 50எம்பி மெயின் கேமரா, 60எம்பி செல்பீ கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4600mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்.
ஐக்யூ இஸட்7 5ஜி
ஐக்யூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக ஐக்யூ இஸட்7 5ஜி (iQOO Z7 5G) வருகிற மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ரீடருடன் அல்ட்ரா-பிரைட் அமோஎல்இடி டிஸ்ப்ளே, 64எம்பி ஓஐஎஸ் கேமரா செட்டப், 44W ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவுடனான 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ54
சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ54 (Samsung Galaxy A54) வருகிற மார்ச் 16 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 6.4-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 3
சமீபத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 2வி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) என்கிற பெயரில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை. இது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, டைமென்சிட்டி 9000 சிப்செட், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் உடன் சேர்த்து இந்த மார்ச் மாதத்தில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 சீரீஸ் (Oppo Find X6 Series) ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த சீரீஸின் கீழ் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








