நல்ல மாசம் பொறக்குது.. 2026 பிப்பவரியில் அறிமுகமாகும் 12 புது போன்கள்.. எது உங்க சாய்ஸ்?
மார்க்கெட்டில் உள்ள முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 2026 பிப்ரவரி மாதத்தில் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் (Samsung), ஐக்யூ (iQOO), விவோ (Vivo) தொடங்கி கூகுள் (Google), மோட்டோரோலா (Motorola) வரை பல பிராண்டுகள் உள்ளன.
1. சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series):இது பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாகும்ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் வெளியீடுகளில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், வலுவான லீக்ஸ் இது பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கின்றன.

"வழக்கம் போல" சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
2. ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மற்றும் ஐக்யூ 15ஆர் (iQOO 15R): ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வருகிற பிப்ரவரி 4, 2026 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 24, 2026 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
3. விவோ வி70 சீரீஸ் (Vivo V70 Series): இது 2026 பிப்ரவரி மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் பிரபலமான இந்த வி-சீரிஸின் கீழ் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் - அவைகள் விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் மாடல்கள் ஆகும்.
4. கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a): இது பிப்ரவரி 2026 ல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாத வாக்கில் கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பிக்சல் மாடல் ஆனது வெளியாகி இருக்கும். ஆகவே இந்த ஆண்டும் அதை நாம் எதிர்பார்க்கலாம்
5. ஆப்பிள் ஐபோன் 17இ (Apple iPhone 17e): இது பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஆப்பிளின் 2026 பட்ஜெட் விலை ஐபோன் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ கடந்த ஆண்டு பிப்ரவரியில் வந்தது, ஆக ஐபோன் 17இ மாடலும் அதே லான்ச் டைம்லைனை பின்பற்றும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது
6. சாம்சங் கேலக்ஸி ஏ57, சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A57, Samsung Galaxy A37): இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்26 ஃபிளாக்ஷிப் சீரீஸ் உடன் கூடுதலாக, சாம்சங் நிறுவனம் பிப்ரவரியில் இந்த இரண்டு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம்
7. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion): இது பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது, இப்போது இந்த பிராண்ட் அதே சீரிஸின் கீழ் இரண்டாவது மாடலான எட்ஜ் 70 ஃப்யூஷனை வெளியிட தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று லீக்ஸ் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








