இந்த மாசம் விட்ருங்க.. ஜூன் மாதம் அறிமுகமாகும் 5 வெயிட்டான புதிய போன்கள்.. OnePlus முதல் Moto வரை!
ஜூன் 2024 இல்.. ஒன்பிளஸ், ஷாவ்மீ, மோட்டோரோலா உட்பட பல மொபைல் போன் நிறுவனங்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அப்படியாக ஜூன் மாதம் அறிமுகமாகும் முக்கியமான 5 முக்கியமான போன்களின் லிஸ்ட் இதோ:
1. விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro): சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகி விட்ட விவோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் விவோவின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக ஜூன் 6, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 8.03-இன்ச் 2கே (2200 x 2480 பிக்சல்ஸ்) அமோஎல்இடி இன்னர் போல்டபிள் டிஸ்பிளே மற்றும் 6.53-இன்ச் (1172 x 2748 பிக்சல்ஸ்) அமோஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுருக்கும். இது ஸ்னாப்டிராகன் 9 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடனாக 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS4.0 ஸ்டோரேஜை கொண்டிருக்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் விவோ வி3 இமேஜிங் சிப் மற்றும் கார்பன் ஃபைபர் கீல் ஆகியவற்றையும் கொண்டுருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ஸெய்ஸ்-பிராண்டட் கேமரா யூனிட்டை (Zeiss-branded camera unit) கொண்டுருக்கும். செல்பீகளுக்காக இன்னர் மற்றும் அவுட்டர் டிஸ்பிளேக்களில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்களை கொண்டுருக்கும்.

கடைசியாக இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,700mAh பேட்டரியை பேக் செய்யும். மடிக்கும்போது 11.2மிமீ தடிமனை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் உடன் வருகிறது. அதுவே இந்தியாவில் பன்டச் ஓஎஸ் ஆக இருக்கும். இந்தியாவில் இது தோராயமாக ரூ.1,20,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
2. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite): ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பட்ஜெட்-விலை நோர்ட் சீரீஸின் கீழ் மேலும் ஒரு ஸ்மார்ட்போனை சேர்க்க உள்ளது. இது ஜூன் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரூ.25,999 க்குள் ஏங்கிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஷாவ்மீ சிவி 14 (Xiaomi Civi 14): இதுவரை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு வந்த ஷாவ்மீ நிறுவனத்தின் சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இது சுமார் ரூ.35,000 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ சிவி 14 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1.5K AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன்8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், 50எம்பி ப்ரைமரி கேமரா + 12எம்பிஅல்ட்ரா-வைட் கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்ட ரியர் கேமரா செட்டப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
4 & 5. மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) மற்றும் மோட்டோரோலா ஜி85 (Motorola G85): மோட்டோரோலா நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஜூன் மாதத்தில் வெளியிட உள்ளது. இரண்டுமே 4500mAh பேட்டரி மற்றும் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும் ; அதில் 64எம்பி + 50எம்பி + 50எம்பி சென்சார்கள் பேக் செய்யப்படும். அதாவது இது வழக்கம் போல எட்ஜ் சீரீஸின் கீழ் வரும் இன்னொரு பெஸ்ட் மொபைல் போட்டோகிராஃபி ஸ்மார்ட்போனாக இருக்கும். மறுகையில் உள்ள மோட்டோரோலா ஜி85 ஒரு பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications