விரைவில் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சங்களை அனுபவிக்கலாம்.!

இனிவரும் ஆண்டுகளில் என்னென்ன வசதிகள் ஸ்மார்ட்போனில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

ஸ்மார்ட்போன் என்பது ஒரு தொலைபேசியாக மட்டுமின்றி மனிதனின் அத்தியாவசிய தேவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்ற் பொழுதுபோக்கு அம்சங்களான ஸ்ட்ரீம் வீடியோ, கேமிங் ஆகியவை தற்போது ஸ்மார்ட்போனில் தத்ரூபமாக உள்ளது.

இதெல்லாம் ஒருசில ஆண்டுகளுக்கு முன் சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஒரு மனிதனின் பெர்சனல் செகரட்டரி போல செயல்பட்டு வருகிறது.

முன்பு 1ஜிபி என்றால் இப்போது 4ஜிபி : இது வோடபோன் 4எக்ஸ் அதிரடி.!

மேலும் தற்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் பவர்புல் கேமிரா, பளிச்சிடும் டிஸ்ப்ளே, பாதுகாப்பு அம்சங்களான பிங்கர் பிரிண்ட் சென்சர், நவீன டெக்னாலஜியுடன் கூடிய பிராஸசர் ஆகியவை கொண்டு வெளிவருகின்றது. மேலும் ஸ்மார்ட்போனின் வசதிகள் இத்துடன் நிற்க போவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வசதிகள் வெளிவந்து அசத்தி கொண்டே இருக்கின்றது.

இனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.!

வருங்காலத்தில் நாம் கனவிலும் நினைத்து பார்க்காத அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இனிவரும் ஆண்டுகளில் என்னென்ன வசதிகள் ஸ்மார்ட்போனில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

வளையும் டிஸ்ப்ளேக்கள் சாத்தியம்

வளையும் டிஸ்ப்ளேக்கள் சாத்தியம்

தற்போது நேராக இருக்கும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்கள் வரும் காலத்தில் பெண்ட் உள்ளதாகவும், போல்டர் டைப்பிலும், எளிதில் ரப்பர் போல வளையும் டைப்பிலும் டிஸ்ப்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே சாம்சங், சியாமி உள்பட ஒருசில நிறுவனங்கள் வளையும் தன்மையுடைய அதாவது நெகிழும் தன்மையுடைய டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வெகு விரைவில் வளையும் தன்மையுடைய ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சுற்றுப்புறங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறியலாம்:

சுற்றுப்புறங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறியலாம்:

இப்போதுள்ள ஸ்மார்ட்போனிலேயே சுற்றுப்புறங்கள் குறித்து ஓரளவுக்கு நேவிகேஷன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

ஆனால் வரும் காலத்தில் நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ அந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை அறியலாம், தியேட்டர், காபி ஷாப், ஷாப்பிங் காப்ளக்ஸ் ஆகியவை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை உடனே விஷூவல் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ரயில், பஸ் கிளம்பும் நேரம், திரைப்படங்களின் டிரைலர், விளம்பரங்களின் மூலம் புதிய தயாரிப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளாலாம். உங்கள் கைவிரலில் உலகமே உள்ளது என்பதை நீங்கள் உணரும் காலம் வெகுதொலையில் இல்லை

உங்களை வேற லெவலுக்கு அழைத்து செல்லும் 3D டிஸ்ப்ளேக்கள்

உங்களை வேற லெவலுக்கு அழைத்து செல்லும் 3D டிஸ்ப்ளேக்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு போனில் 3D டிஸ்ப்ளே இருப்பதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் மிக விரைவில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்துமே 3D டிஸ்ப்ளேவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளது. இதன்மூலம் நமது எண்டர்டெயின்மெண்ட் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

உங்கள் வாய்ஸ் கமாண்டை செயல்படுத்தும் திறன

உங்கள் வாய்ஸ் கமாண்டை செயல்படுத்தும் திறன

இப்போதே ஆப்பிள் சிறி என்ற ஆப், உங்கள் குரல் கட்டளையை நிறைவேற்றும் தன்மை உடையதாக உள்ளது. இருப்பினும் இதுபோன்றாஅப்பிள் சிறி, கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்சா உள்பட அனைத்து ஆப்ஸ்களும் ஓரளவுக்குத்தான் கட்டளைக்கு அடிபணியும் வகையில் உள்ளன.

ஆனால் வரும் காலத்தில் நமது பெர்சனல் அசிஸ்டெண்ட் நம்முடைய குரலில் கட்டளையை எந்த அளவுக்கு புரிந்து கொள்வாரோ அதே அளவுக்கு செயற்கை மூளையுடன் கூடிய ஸ்மார்ட்போன், நமது அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றும் ட் தன்மையுடைய ஸ்மார்ட்போன்கள் மிக விரைவில் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.

பணப்பரிவர்த்தனையை அபாரம் ஆக்கும்

பணப்பரிவர்த்தனையை அபாரம் ஆக்கும்

தற்போது ஸ்மார்ட்போன்கள் மூலம் ஓரளவு பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் பே, சாம்சங் பே ஆகியவை இதற்கு உதவுகிறது.NFC என்று கூறப்படும் பணப்பரிவர்த்தை எதிர்காலத்தில் மிக மிக நவீனமயம் ஆகும் வாய்ப்பு உள்ளது.

ஓட்டல் ரூம் புக் செய்ய வேண்டுமா, உங்கள் வீட்டு கதவை திறக்க வேண்டுமா? உள்பட பல வேலைகளை ஸ்மார்ட்போன் ஆப் செய்துவிடும். அதுமட்டுமின்றி வெகுவிரைவில் உங்களுடைய டெபிட், கிரெடிட் கார்ட், கோட் நம்பர், ஆகியவை உள்பட பலவற்றுக்கு பதிலாக உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு சாதனமாக மாறிவிடும்

புரொஜக்டராக மாறுமா?

புரொஜக்டராக மாறுமா?

தற்போது உள்ள சாம்சங் கேலக்ஸி பீம், பீம் 2, லெனோவா ஸ்மார்ட்கேஸ்ட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் புரஜொக்டருக்கு பயன்படும் வகையில் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இன்னும் அதிக வசதியுடன் ஸ்மார்ட்போன்களை புரஜொக்டராக உபயோகப்படுத்தலாம்.

மேலும் ஸ்மார்ட்போனில் இருந்து சுவற்றிலோ, அல்லது ஸ்க்ரீனிலோ தெள்ள தெளிவாக படம் காட்டும் வித்தையை நீங்கள் வெகுவிரைவில் பார்க்கலாம். கேமிரா மற்றும் சென்சார் மூலம் நேரலை உள்பட பல விஷயங்களை ஸ்மார்ட்போனில் இருந்தே புரஜொக்டரில் வீடியோ பார்க்கும் வசதியுள்ள போன்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
we come up with the upcoming smartphone features and functionalities that we can see in the coming years.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X