தரமான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் Redmi Note 12 series.!
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள நோட் 12 சீரிஸ் போன்கள் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மீடியாடெக்
அதாவது விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் தரமான மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.எனவே இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அல்ட்ரா வைடு சென்சார்
ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் 50எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் சிப்செட் மற்றும் கேமரா விவரம் மட்டும் தான் ஆன்லைனில் கசிந்துள்ளது. விரைவில் இந்த போன்களின் முழு அம்சங்களும் வெளிவரும்.
மேலும் இந்நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 எஸ்இ
6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். ஃபுல் எச்டி பிளஸ்டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஹீலியோ ஜி95 சிப்செட்
மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கூட கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். கண்டிப்பாக நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

கனெக்டிவிட்டி
4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். மேலும் ஸ்பிளாஸ்-ப்ரூஃப் டிசைன், இசட்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications