Home
Mobile

இதை விட ஒரு நல்ல போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா.! Redmi சொன்ன நற்செய்தி.!

ரெட்மி நிறுவனம் விரைவில் புதிய ரெட்மி கே60 எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் தனித்துவமான வடிவமைப்பில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

 5ஜி ஆதரவு

5ஜி ஆதரவு

அதேபோல் இது 5ஜி ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் கூட வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி கே60 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Dimensity 8200 சிப்செட்

Dimensity 8200 சிப்செட்

அதாவது விரைவில் அறிமுகமாகும் ரெட்மி கே60 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி ட்ரிபிள் ரியர்

48எம்பி ட்ரிபிள் ரியர்

அதேபோல் ரெட்மி கே60 ஸ்மார்ட்போன் 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக ரெட்மி கே60 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 எஸ்இ

ரெட்மி நோட் 11 எஸ்இ

6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தரெட்மி போன்.

மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன்.அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன்.

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.

 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி

33W பாஸ்ட் சார்ஜிங் வசதி

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் ஹை-ரெஸ் ஆடியோ டூயல்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் டிசைன், இசட்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி போன்.

Best Mobiles in India

English summary
upcoming Redmi K60 phone is powered by the MediaTek Dimensity 8200 chipset: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X