ப்ளீஸ் வெயிட்.. ரூ.20,000 டூ ரூ.60,000 வரை.. அடுத்த வாரம் அறிமுகமாகும் 6 அட்டகாசமான போன்கள்.. இதோ லிஸ்ட்!
அடுத்த சில நாட்களில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் (Upcoming Phones) என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நான்கு பிராண்டுகள் தத்தம் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உறுதி செய்துள்ளன. இதில் இரண்டு வெளியீட்டு நிகழ்வுகள் சீனாவில் நடைபெற உள்ளன. மீதமுள்ள இரண்டில் ஒன்று இந்தியாவில் நடக்கவுள்ளது. மற்றொன்று உலகளவில் நடக்கவுள்ளது.
ஐக்யூ மற்றும் ஒப்போ ஆகிய இரண்டு நிறுவனங்களும் சீனாவில் வெளியீட்டு நிகழ்வுகளை நடத்தவுள்ளது. அதேசமயம் போக்கோ நிறுவனம் உலகளாவிய நிகழ்வை நடத்தும். இறுதியாக, ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்தவுள்ளன. இப்படியாக என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

1. ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ (iQOO Neo 9s Pro): ஐக்யூவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது மே 20 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இது மீடியாடெக் டைமென்சிட்டி 9300 பிளஸ் சிப்செட், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் 6.78-இன்ச் 1.5கே OLED டிஸ்பிளே, 50எம்பி வைட் + 50எம்பி அல்ட்ரா வைட் டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 5160mAh பேட்டரி, 120W வயர்டு சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
2. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T): ரியல்மியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது மே 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ரியல்மி ஜிடி 6டி ஆனது ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ (Realme GT Neo 6 SE) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பது போல் தோன்றுகிறது.
ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் (1264 x 2780 பிக்சல்ஸ்) 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கடைசியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி 6டி என்ன விலைக்கு வரும்? இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இதே விலைக்கு தான் ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. ஒப்போ ரெனோ12 சீரிஸ் (Oppo Reno 12 Series): ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது மே 23 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 12 (Oppo Reno 12) மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ (Oppo Reno 12 Pro) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ 12 குறித்த டீஸரில் சில்வர் கலர் ஆப்ஷனை காண முடிகிறது. ஆகவே இவ்விரு ஸ்மார்ட்போன்களில் ஒன்று சில்வர் பினிஷ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரெனோ 12 ப்ரோ மாடலானது பர்பிள் கலர் ஆப்ஷனில் தோன்றுகிறது. மேலும் இரண்டு போன்களுமே பளபளப்பான பினிஷ் மற்றும் மேல் இடது மூலையில் நீள்வட்ட வடிவிலான ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன.
இதுதவிர்த்து ரெனோ 12 சீரீஸ் போன்களை பற்றிய வேறு எந்த விவரங்களையும் ஒப்போ பகிரவில்லை. இருப்பினும் லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில் வெண்ணிலா ஒப்போ ரெனோ 12 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8250 சிப்செட் (MediaTek Dimensity 8250 SoC) மூலம் இயக்கப்படும்; அதே சமயம் ப்ரோ வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9200+ SoC) உடன் வரும்.
மேலும் இரண்டு மாடல்களிலுமே 50-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்கள் இடம்பெறும். முக்கிய வேறுபாடுகளை ப்ரோ மாடலில் காணலாம். இது 6.7 இன்ச் 120ஹெர்ட்ஸ் 1.5கே டிஸ்பிளே, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு, 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவற்றை பேக் செய்யும்
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 11 ப்ரோ வேரியண்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும், வெண்ணிலா வேரியண்ட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ,29,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது. இதைப்போலவே ரெனோ 12 ப்ரோ மாடலானது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ரெனோ 11 மாடலானது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
4. போக்கோ எப்6 சீரீஸ் (Poco F6 Series): போக்கோவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது மே 23 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படும். இந்த சீரீஸின் கீழ் போக்கோ எப்6 மற்றும் போக்கோ எப்6 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும். போக்கோ எஃப்6 ப்ரோவானது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை (Triple Rear Camera Setup) பேக் செய்யும். இது 120W வயர்டு ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (120W Wired HyperCharge Fast Charging Support) உடனான 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








