நல்ல மாசம் பொறக்குது.. ஜூன் மாசம் அறிமுகமாகும் 5 அட்டகாசமான போன்கள்.. OnePlus 13s முதல் Nothing Phone 3 வரை!
2025 இல் புதிய ஸ்மார்ட்போன் வாங்க "என்னைய விட நல்ல மாசம் இருக்காது" என்று ஜூன் மாதமே பெருமை கொள்ளும் அளவிற்கு ஜூன் 2025 பல முக்கிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Phones June 2025) அறிமுகம் செய்யப்பட உள்ளன. அப்படியாக பிரீமியம் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் என்னென்ன போன்கள் எப்போது அறிமுகமாகும்? என்ன மாதிரியான விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
1. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s): ஜூன் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.49,990 ஆக இருக்கலாம்.

2. நத்திங் போன் 3: இது 2025 ஜூன் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங்கின் இந்த அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 ஆக இருக்கலாம்.
3. விவோ டி4 அல்ட்ரா: இது 2025 ஜூன் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50எம்பி சோனி IMX921 சென்சார், 3X ஜூம் கொண்ட 50எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 10X மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
4. இன்ஃபினிக்ஸ் ஜிடி30: இது 2025 ஜூன் மாதத்தின் முதல் வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் கேமர்களை இலக்காக கொண்ட இன்ஃபினிக்ஸ் ஜிடி30 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், அதிக ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் ரூ.25,000 க்கு அறிமுகப்படுத்தப்படலாம்.
5. விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) : இந்த ஸ்மார்ட்போனும் ஜூன் 2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ எக்ஸ்200 சீரீஸின் கீழ் உள்ள விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் இணையும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000 முதல் ரூ.60,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட் பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "கணிசமாக" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். முன்னதாக வந்த மாடல்களை விட குறிப்பிடத்தக்க அப்கிரேட்-ஐ கொண்டிருக்கும்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம். நத்திங் போன் 3 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்கு 2 காரணங்களை முன்வைக்கலாம்.
ஒன்று - நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் தான் உள்ளது. ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான கேமரா அப்கிரேட் தேவைப்படும். இரண்டாவது - நத்திங் போன் 3ஏ சீரீஸ் மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய அனைத்துமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன. ஆக நத்திங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடலில், மற்ற மிட்-ரேன்ஜ் மாடல்களில் இருப்பதை விட நல்ல கேமரா செட்டப் இடம்பெறுவதில்லை எந்த ஆச்சரியமும் இல்லை.
பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய இரண்டும் அதிகபட்சமாக 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆக நத்திங் போன் 3 சற்றே பெரிய பேட்டரி உடன் வரலாம்.


Click it and Unblock the Notifications








