அடுத்த 4 நாட்களில்.. நச்சுனு 4 புது போன்கள் அறிமுகம்.. OnePlus, Samsung, iQOO, Honor ஃபேன்ஸ் ரெடியா இருங்க!
ஜூலை மாதத்தின் முதல் 2 வாரங்களில்.. "ஆஹா எதை வாங்குறது.. எதை விடுறதுன்னே தெரியலயே!" என்று வாடிக்கையாளர்களை குழப்பும் அளவிற்கு.. பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின. ரியல்மி சி63, சிஎம்எப் போன், ரெட்மி 13 5ஜி, மோட்டோ ஜி85 5ஜி, லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி, சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6, கேலக்ஸி இஸட் பிளிப் 6, ஒப்போ ரெனோ 12 சீரிஸ் என பல தரமான மற்றும் பிரபலமான இந்தியயாவில் அறிமுகமாகின.
2024 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரமும் கூட அப்படித்தான் இருக்கப்போகிறது. அடுத்த 4 நாட்களில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில்.. மொத்தம் 4 நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை (Upcoming phones) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளன. என்னென்ன நிறுவனங்கள் என்னென்ன மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன? அவைகள் என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

1. ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): ஐக்யூவின் இந்த பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் பிரைம் டே விற்பனையின் (Amazon Prime Day Sale) போது வெளியிடப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், இது ஜூலை 20 அல்லது ஜூலை 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரலாம். இந்தியாவில் இது ரூ.13,000 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜூலை 16 ஆம் தேதி அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G): இது 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கும். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். இருப்பினும், மேற்க்கூறப்பட்ட விலை அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கிய விலையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
3. ஜூலை 17 ஆம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பை (Corning Gorilla Glass Victus Plus Protection) கொண்ட முதல் சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போனாக வெளியாக உள்ளது.

மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான இன்ஃபினிட்டி-ஓ (எச்ஐடி) எஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, 5என்எம் எக்ஸினோஸ் 1380 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 25W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 6,000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். விலையை பொறுத்தவரை, இது ரூ.18,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
4. ஜூலை 18 ஆம் தேதி அறிமுகமாகும் ஹானர் 200 5ஜி சீரீஸ் (Honor 200 5G Series): இந்த சீரிஸின் கீழ் ஹானர் 200 5ஜி (Honor 200 5G) மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G) ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாகும். விலையை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது ரூ.39,990 கும், ப்ரோ வேரியண்ட் ஆனது ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








