Home
Mobile

iQOO 12 முதல் OnePlus 12 வரை.. எப்போ வரும்.. எப்போ வாங்கலாம்னு பல பேரை காத்திருக்க வைத்திருக்கும் 7 போன்கள்!

எப்போது அறிமுகமாகும், எப்போது வாங்கலாம்? என்று பலரையும் காத்திருக்க வைத்திருக்கும் 7 ஸ்மார்ட்போன்களை (Upcoming Phones) பற்றிய கட்டுரையே இது. அதென்ன மாடல்கள்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சரியாக எப்போது அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்?

01. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகிவிட்ட ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனானது வருகிற டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது அதிகார்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) கொண்டும் இயங்கும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

iQOO 12 முதல் OnePlus 12 வரை.. எப்போது, என்ன விலைக்கு வரும்?

கூடவே, 3எக்ஸ் 64எம்பி பெரிஸ்கோப் ஜூம் லென்ஸுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஐக்யூ போனாகவும் இது இருக்கும். மேலும் இது 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 16GB ரேம் மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்யலாம். இந்தியாவில் இது ரூ.45,000 பட்ஜெட்டில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. ஒன்பிளஸ் 12 (OnePlus 12): ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை போலவே ஒன்பிளஸ் 12 மாடலும் கூட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். ஆனால் இது 2023 டிசம்பரில் அறிமுகமாகாது; மாறாக 2024 ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம்.

iQOO 12 முதல் OnePlus 12 வரை.. எப்போது, என்ன விலைக்கு வரும்?

ஒன்பிளஸ் 12 ஆனது பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் உடன் வரும் முதல் நான்-ஃபோல்டபிள் ஒன்பிளஸ் போனாகவும் இருக்கும். மேலும் இது BoE-இன் அதிநவீன 2K ரெசல்யூஷன் 120Hz டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 5,400mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 ஸ்கின் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும். இந்தியாவில் இது ரூ.80000 பட்ஜெட்டில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): இது மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம். ஒன்பிளஸ் 12 அறிமுகத்திற்கு பின்னர் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO 12 முதல் OnePlus 12 வரை.. எப்போது, என்ன விலைக்கு வரும்?

04 & 05. விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro): சீனாவில் அறிமுகமாகிவிட்ட இவ்விரு விவோ மாடல்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் (Mediatek Dimensity 9300 SoC) உடன் இந்தியாவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆக இருக்கலாம்.

செய்ஸ் ஆப்டிக்ஸ் (Zeiss Optics) உடன் விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மொபைல் கேமரா செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு AMOLED டிஸ்பிளே, ஐபி68 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.56,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

06. ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro): இது ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் அனுப்பப்படும் ஷாவ்மீ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்படாத லாங்ஜிங் டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் வடிவமைப்பு, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இந்தியாவில் இது ரூ.56,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

07. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus): இது மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட்-ரேஞ்ச் போன்களில் ஒன்றாகும். இது அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் முதல் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட், மீடியா டெக் டைமன்சிட்டி 7200 சிப்செட், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 200எம்பி மெயின் கேமரா, அலுமினியம் ஃப்ரேம், ஐபி68 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.இந்தியாவில் இது ரூ.22,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
upcoming phones iqoo 12 oneplus 12 xiaomi 14 pro redmi note 13 pro plus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X