வெயிட் பண்ணுங்க.. நல்ல மாசம் பொறக்க போகுது.. டிசம்பரில் அறிமுகமாகும் 5 புதிய போன்கள்! இதோ லிஸ்ட்!
2023 நவம்பரில் இன்னும் ஒரே ஒரு அறிமுக நிகழ்வு மட்டுமே மிச்சம் உள்ளது. நவம்பர் 29 ஆம் தேதியன்று ரெட்மி கே70 சீரீஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்கீழ் ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ மற்றும் ரெட்மி கே70இ என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகவுள்ளது.
மேற்கண்ட மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே நேரடியாக அதே பெயர்களின் கீழ் இந்திய சந்தைக்கு வர வாய்ப்பே இல்லை. ஒருவேளை போக்கோ பிராண்டிங்கின் கீழ் ரீபிராண்டட் வெர்ஷன்களாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த இடத்தில் தான் நம்முடைய முழு கவனமும் 2023 டிசம்பரில் அறிமுகமாகும் புதிய போன்களின் (Upcoming Phones December 2023) மீது திரும்புகிறது.

தற்போது வரையிலாக வருகிற டிசம்பர் மாதத்தில் 5 புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வுகள் நடக்கலாம். அதன்கீழ் சில மிக முக்கியமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
01. ஒன்பிளஸ் 12 (OnePlus 12): முன்னதாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 2023 செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து 2024 ஜனவரி வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்லாமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 3 SoC) கொண்டு இயங்கும் என்பதும், 2கே ரெசல்யூஷன் உடனான BOE X1 OLED LTPO டிஸ்பிளேவை பேக் செய்யும் என்பதும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 12 ஆனது கல்ர்ஓஎஸ் 14 (ColorOS 14) உடன் அனுப்பப்படும் என்பதும், கேமரா செட்டப்பில் சோனி LYTIA LYT808 மெயின் ரியர் கேமரா மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை (Periscope Telephoto Camera) உள்ளடக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

02. ஐக்யூ 12 (iQOO 12): கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ஐக்யூ 12 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் உடன் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
இது OIS ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ராவைட் கேமராவும் (மேக்ரோ) + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 144Hz 6.7-இன்ச் OLED பிளாட் டிஸ்பிளே, 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
03. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus): இது சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது எப்படியும் டிசம்பர் 2023க்குள் வெளியாகிவிடும். 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் மெயின் கேமரா, 6.67-இன்ச் 1280p OLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 14 ஓஎஸ், 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.
04. ஒப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11 Series): நவம்பர் 23 ஆம் தேதியன்று சீன சந்தையில் அறிமுகமான ஓப்போவின் புதிய ரெனோ 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2023 டிசம்பரில் உலகளாவிய வெளியீட்டை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸின்கீழ் ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ அறிமுகமாகும்.
வெண்ணிலா வேரியண்ட் ஆனது டைமன்சிட்டி 8200 சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் OLED டிஸ்பிளே, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,800mAh பேட்டரி, 50எம்பி சோனி LYT600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எக்ஸ் ஜூமிங்கை வழங்கும் 32 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவை கொண்டுள்ளது.
மறுகையில் ப்ரோ வேரியண்ட் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4700mAh பேட்டரி, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எக்ஸ் ஜூமிங்கை வழங்கும் 32எம்பி போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவற்றை வழங்குகிறது.
05. ஹானர் 100 சீரிஸ் (Honor 100 Series): இதுவும் நவம்பர் 23 ஆம் தேதியன்று சீன சந்தையில் அறிமுகமானது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்த சீரிஸின்கீழ் அறிமுகமான ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ மாடல்கள் ஆனது 2023 டிசம்பரில் உலகளாவிய வெளியீட்டை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஹானர் 100 மாடலும் ஒன்றாகும். இது 6.7 இன்ச் OLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 7.2, 50எம்பி Sony IMX906 மெயின் கேமரா, 12எம்பி அல்ட்ராவைட் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications