நல்ல மாசம் பொறக்குது.. செப்.2025 இல் 10 புதிய போன்கள் அறிமுகம்.. iPhone 17 முதல் Lava Agni 4 வரை!
2025 ஆகஸ்ட் மாதம் "கிட்டத்தட்ட" இனிதே முடிந்தது. கூகுள் பிக்சல் 10 சீரீஸ், விவோ வி60 மற்றும் பல முக்கிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால்.. ஸ்மார்ட்போன் துறை சற்று பரபரப்பாகவே கடந்தது. ஆனால் உண்மையான பரபரப்பே - செப்டம்பர் 2025 இல் தான் இருக்கிறது.
ஏனென்றால் "உலகளாவிய சென்சேஷன்" ஆன ஆப்பிளின் புதிய ஐபோன் மாடல்கள் தொடங்கி "உள்ளூர் சென்சேஷன்" ஆன.. இந்திய பிராண்ட் ஆன லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வரையிலாக.. செப்டம்பர் 2025 இல் (இதுவரையிலாக) மொத்தம் 10 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உறுதி "கிட்டத்தட்ட" செய்யப்பட்டுள்ளன.

1. ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series): ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஆனது நிச்சயம் செப்டம்பர் 2025 இல் அறிமுகமாகும் என்பது உறுதி. வெளியீட்டு தேதி தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை; ஆனால் சாத்தியமான லான்ச் டேட் - செப்டம்பர் 9 ஆம் தேதி ஆகும்
ஐபோன் 17 சீரீஸின் கீழ் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர் (ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக), ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE): சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனை, செப்டம்பர் 5, 2025 அன்று ஐஎப்ஏ பெர்லினில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிளை போலவே சாம்சங் நிறுவனமும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பிளாட் ஆன ஃபிரேம், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 6.7-இன்ச் AMOLED பேனல், 8ஜிபி வரை ரேம், கிட்டத்தட்ட 5,000mAh பேட்டரி ஆகியவைகளை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் வருமென்று கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.62,999 ஆக இருக்கலாம்.
3. ஒப்போ எப்31 சீரீஸ் (Oppo F31 Series): ஒப்போவின் எப்31 சீரீஸ் அந்த செப்டம்பர் 12 மற்றும் 14 க்கு இடையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸில் ஒப்போ எப்31 (Oppo F31), ஒப்போ எப்31 ப்ரோ (Oppo F31 Pro) மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் (Oppo F31 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை னைத்து மாடல்களிலும் 7,000mAh பேட்டரி இடம்பெறலாம். குறிப்பாக ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம், அதே நேரத்தில் ப்ரோ மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் முறையே டைமன்சிட்டி 7300 மற்றும் டைமன்சிட்டி 6300 சிப்செட்களைபய ன்படுத்தலாம்.
4. மோட்டோரோலா ரேசர் 60 ஸ்வரோவ்ஸ்கி எடிஷன் (Motorola Razr 60 Swarovski Edition): மோட்டோரோலா நிறுவனம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் ரேசர் 60 ஸ்வரோவ்ஸ்கி எடிஷனை அறிமுகப்படுத்த உள்ளது, இதில் 3டி குயில்டட் ஃபினிஷில் 35 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் (35 Swarovski crystals in a 3D quilted finish) உள்ளன.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் LTPO pOLED டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட ரேசர் 60 அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் 30W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
5. லாவா அக்னி 4 (Lava Agni 4): சில அறிக்கைகளின்படி, லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் "வாரிசு" 2025 செப்டம்பரில் அறிமுகமாகலாம். அது லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இருப்பினும், வெளியீட்டு தேதி, அம்சங்கள், வடிவமைப்பு குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








