சந்தை சமாளிக்க வரும் புதிய மோட்டோரோலா மொபைல்!

Posted By: Staff
சந்தை சமாளிக்க வரும் புதிய மோட்டோரோலா மொபைல்!

குறைந்த விலையில், உயர்ந்த தொழில் நுட்பத்தில் மின்னனு சாதனங்களை கொடுப்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்துக் கொண்டு செயல்படுகிறது மோட்டோரோலா நிறுவனம் என்று தாராளமாக கூறலாம். ஏனென்றால், இதை மோட்டோரோலா நிறுவனத்தின் ஒவ்வொரு படைப்பில் இருந்தும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

எத்தனை உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுத்தாலும், அந்த பொருள் குறைந்த விலையில் இருந்தால் மட்டுமே அதன் பெருமை பட்டி தொட்டியெல்லாம் பரவும் என்பது எழுதப்படாத உண்மையாகிவிட்டது.

இதற்கு ஏற்ற வகையில் இஎக்ஸ்-245 என்ற மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். டிஎப்டி தொடுதிரை வசதி கொண்ட இந்த இஎக்ஸ்-245 மொபைல், 65கே கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது.

2048 x 1536 பிக்ஸல் உயர்ந்த துல்லியம் கொடுக்கும் இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமரா, அழகான புகைப்படம் எடுப்பது பற்றிய கவலையை போக்கும். ஃபேஸ் இன்டெக்ஷன், ஜியோ டேக்கிங் போன்ற தொழில் நுட்பம் இந்த கேமராவில் ப்ரீ-லோடட் செய்யப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் போன் புக்கில் 1,000 மொபைல் நம்பர்களை ஸ்டோர் செய்து கொள்ளாலாம். இன்டர்னல் மெமரி வசதியும் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெமரி வசதிக்கு இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் பெரிதும் உதவுகிறது.

இஎக்ஸ்-245 மொபைல் ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்டதால் இரண்டு நெட்வொர்க் சப்போர்ட்களை இதன் மூலம் பெறலாம். இதில் உள்ள யூஎஸ்பி வசதியின் மூலம் வேகமாக தகவல்களை பதிவோற்றம் செய்யலாம். தகவல் பரிமாறி கொள்வதையும் இதன் புளூடூத் 2.0 மூலம் சிறப்பாக செய்ய முடியும்.

இந்த இஎக்ஸ்-245 மொபைலில் உள்ள தொழில் நுட்பங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்பத்தை அளிக்கும் என்பதை போல, இதன் விலையும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்று சொல்லலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot