பட்ஜெட் விலையில் 108எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் Oppo போன்.!

|

ஒப்போ நிறுவனம் விரைவில் Oppo A Series ஸ்மார்ட்போன்கனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஏ-சீரிஸ்

ஒப்போ ஏ-சீரிஸ்

மேலும் இந்த ஒப்போ ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ போன்றஅம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

மூன்று போன்கள்

மூன்று போன்கள்

அதேபோல் இந்த ஒப்போ ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏ-சீரிஸ்-இல்
மொத்தம் மூன்று போன்கள் அறிமுகமாகும் என்றும், அனைத்துமே உயர்-ரக அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

ஒப்போ ஏ-சீரிஸ் போன்கள்

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ-சீரிஸ் போன்கள் வளைந்த டிஸ்ப்ளே, 2160Hz பல்ஸ்-விட்த் மாட்யுலேஷன் டிம்மிங் வசதி கொண்டுள்ளன. இவை ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆகாமல் பார்த்துக் கொள்வதோடு சீரான டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒப்போ ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதுமைனா இதுதான்- 150W எண்டூரன்ஸ் பதிப்பு, சூப்பர்வூக் சார்ஜிங்: புதுமைனா இதுதான்- 150W எண்டூரன்ஸ் பதிப்பு, சூப்பர்வூக் சார்ஜிங்: "ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி" இந்தியாவில் அறிமுகம்!

 ஒப்போ ஏ17

ஒப்போ ஏ17

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

5000 எம்எச் பேட்டரி

5000 எம்எச் பேட்டரி

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஏ17.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Upcoming Oppo A-series smartphones with 108MP main camera: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X