பேரு "நோக்கியா" நியாபகம் இருக்குதா?- ஒன்னு இல்ல நான்கு ஸ்மார்ட்போன் வருது: ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம் சார்!

|

நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான உரிமத்தை வைத்திருக்கும் எச்எம்டி குளோபல் நான்கு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி தற்போதைய நிலவரப்படி, இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கசிந்த ரெண்டர்களில் கசிவு மாடல் எண்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் ரெண்டர்கள் தகவல்களை பார்க்கலாம்.

நோக்கியா என்152டிஎல் ரெண்டர்கள்

நோக்கியா என்152டிஎல் ரெண்டர்கள்

பிரபலமான டிப்ஸடர் இவான் பிளாஸ்-ன் தகவல்படி, நோக்கியா என்152டிஎல் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இது முன்புறத்தில் தடிமனான பெசல்கள் மற்றும் ஒற்றை பின்புற கேமரா சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு கோ பதிப்பில் இயங்குகிறது எனவும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட செல்பி கேமரா சென்சார் ஆக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நீக்கக்கூடிய பின்புற கவர், பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் கீ, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா என்151டிஎல் ரெண்டர்கள்

நோக்கியா என்151டிஎல் ரெண்டர்கள்

நோக்கியா N151DL சாதனம் குறித்து பார்க்கையில், ஸ்மார்ட்போன் செல்பி கேமரா சென்சாரை வைக்க டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிற நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களை போன்றே இது அடர்த்தியான அடிப்பகுதி உளிச்சாயுமோரம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெண்டர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவலின்படி இது 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பின்புறத்தில் வட்ட வடிவ கேமரா தொகுதியை கொண்டிருக்கும் எனவும் பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை சென்சார் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.

நோக்கியா என்150டிஎல் ரெண்டர்கள்

நோக்கியா என்150டிஎல் ரெண்டர்கள்

வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா என்150டிஎல் கசிந்த ரெண்டர்களின் படி, ஸ்மார்ட்போன் சிறிய வாட்டர் டிராப் நாட்ச் மூலம் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை காட்டுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புற மேல் இடது மூலையில் மூன்று கேமரா சென்சார்களை கொண்ட வட்ட கேமரா தொகுதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் கூகுள் அசிஸ்டெண்ட் பட்டன், 3.5 மிமீ ஹெஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா என்1530டிஎல்

நோக்கியா என்1530டிஎல்

நோக்கியா என்1530டிஎல் ஸ்மார்ட்போன் செல்பி கேமரா சென்சாரை கொண்டிருக்கும் டியர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. பவர் பட்டன், கூகுள் அசிஸ்டென்ட் கீ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உட்பட கைரேகை ஸ்கேனர் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் எப்போது, கூடுதல் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்த விவரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்த பிறகே தெரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன்

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன்

சமீபத்தில் அமெரிக்காவில் நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான சிப்செட், பெரிய டிஸ்பிளே என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதி

6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதி

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48 எம்பி பிரைமரி சென்சார்

48 எம்பி பிரைமரி சென்சார்

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்டபோன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Upcoming Nokia Smartphone: Four Nokia Smartphone Info Leaked Via Renders

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X