Home
Mobile

வேற போன் வாங்கும் ஐடியா இருந்தா.. ப்ளீஸ் வாங்கிடாதீங்க.!

சீன சமூக வலைப்பின்னல் தளமான விபோவில் நோக்கியா 9 அதன் பிரதான அம்சங்களுடன் காணப்பட்டுள்ளது. இந்த லீக்ஸ் வெளிப்படுத்தும் பிராதன அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.

By Muthuraj

நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், அதன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்றை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி அக்கருவி - நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக தான் இருக்கும்.

வேற போன் வாங்கும் ஐடியா இருந்தா.. ப்ளீஸ் வாங்கிடாதீங்க.!

அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சீன சமூக வலைப்பின்னல் தளமான விபோவில் நோக்கியா 9 அதன் பிரதான அம்சங்களுடன் காணப்பட்டுள்ளது. இந்த லீக்ஸ் வெளிப்படுத்தும் பிராதன அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.

அல்டரா ஸ்லிம் பெஸல்கள்

அல்டரா ஸ்லிம் பெஸல்கள்

வெளியான தகவலின்படி, நோக்கியா 9 ஆனது (கிட்டத்தட்ட முழுமையான) பெஸல்லெஸ் டிஸ்பிளேவை வெளிப்படுத்துகிறது. கருவியின் வலது மற்றும் இடது பக்கத்தில் அல்டரா ஸ்லிம் பெஸல்கள் இடம்பெறுள்ளது.

18: 9 என்கிற விகிதத்திலான திரை

18: 9 என்கிற விகிதத்திலான திரை

நோக்கியா 9-ன் மேல் மற்றும் தாடை பகுதியில் தாட் பிட் அடர்த்தியான பெஸல்களை காணமுடிகிறது. முன்னதாக வெளியான கசிவுகள் இந்த சாதனம் 18: 9 என்கிற விகிதத்திலான திரை அளவை கொண்டிக்கும் என்கிறது.

மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ்

மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ்

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த ஸ்மார்ட்போன் அதன் முக்கிய குறிப்புகளை எப்சிசி தளத்தில் (FCC) வெளிப்படுத்தியது. அந்த பட்டியலின் படி, நோக்கியா 9 ஆனது மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ் காணப்பட்டது.

கேமராத்துறை

கேமராத்துறை

அதன் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல (எல்ஜி நிறுவனம் மூலம்செ ய்யப்பட்ட) ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 18: 9 அளவிலான பேனல் கொண்டிருக்கும். கேமராத்துறையை பொறுத்தமட்டில், நோக்கியா 9 ஆனது 12எம்பி + 13எம்பி என்கிற இரட்டை பின்புற கேமராக்களை வெளிப்படுத்தியுள்ளது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பு

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பு

இதன் கேமரா ஆர்ஜிபி சென்சார் மற்றும் ஒரு மோனோக்ரோம் சென்சார் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி கேமரா இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

இந்த சாதனம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படும். வெளியான, எப்சிசி சான்றிதழ் ஆவணங்கள் பட்டியலில் ரேம் அளவு பற்றிய விவரங்கள் இல்லை. இருப்பினும் இக்கருவி 128ஜிபிவரையிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

3250எம்ஏஎச் பேட்டரி

3250எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு ஓரியோவை கொண்டு இயங்கும் நோக்கியா 9 ஆனது 3250எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம். வடிவமைப்பை பொறுத்தமட்டில், நோக்கியா 9 ஆனது நோக்கியா 8-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றலாம்.

இரட்டை செல்பீ கேமரா

இரட்டை செல்பீ கேமரா

சுவாரசியம் என்னவென்றால், வெளியான பட்டியலில் ஒற்றை செல்பீ கேமரா முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் வெளியான லீக்ஸ் புகைப்படமோ நோக்கியா 9 ஆனது இரட்டை செல்பீ கேமரா அமைப்பை காட்டுகிறது.

ஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர்

ஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர்

இதற்கு முன்னதாக வெளியான தகவல்கள், நோக்கியா 9 ஆனது ஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனரைத் தொகுக்கப் போவதாக கூறியிருந்தது. ஆனால் எப்சிசி சான்றிதழ் பக்கங்களில் அப்படியொரு தகவல் ஏதுமில்லை.

ஜனவரி மாதம் 19-ஆம் தேதி

ஜனவரி மாதம் 19-ஆம் தேதி

இவைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை ஆகவே இதை சிட்டிகை உப்பின் ஒரு அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி சீனாவில் நடக்கும் நிகழ்வொன்றில், எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை நோக்கியா தொலைபேசிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Upcoming Nokia 9 Smartphone Pays a Visit to FCC; Reveals Snapdragon 835 SoC, 5.5-inch OLED Display. Read more about this is Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X