அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. ஏன்னா.. அடுத்த வாரம் இந்த 5 சூப்பர் போன்களும் அறிமுகம் ஆகுது!
2023 ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் 3 புதிய ஸ்மார்ட்போன்களின் (New Smartphones) இந்திய அறிமுகங்கள் (India Launch) மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அதோடு சேர்த்து மேலும் 2 ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் (Global Launch) செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் 3 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? அவற்றின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்ன? இவைகள் சரியாக எந்தெந்த தேதிகளில் அறிமுகமாகும்? மறுகையில்.. அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் 2 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? இதோ விவரங்கள்:

01. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G): இது வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, இது 3எக்ஸ் ஜூம் ஆதரவு உடனான 108எம்பி மெயின் கேமராவை (108MP Main Camera) கொண்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது 120 ஹெர்ட்ஸ ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ எல்சிடி டிஸ்பிளேவுடன் வரலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100 Plus chipset) மூலம் இயக்கப்படலாம். விலையை பொறுத்தவரை இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும்.
2. ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G): இதுவும் ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும். இது ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் எடிஷன் ஆகும். அதாவது இதில் 108எம்பி மெயின் கேமராவிற்கு பதிலாக 64எம்பி கேமரா (64MP Main Camera) இடம்பெறும்.
இதுதவிர்த்து ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை இதுவும் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வரும்; ஆனால் கண்டிப்பாக ரியல்மி 11 5ஜி மாடலை விட சற்றே மலிவான விலைக்கே அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
03. விவோ வி29இ (Vivo V29e): இது வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 64-மெகாபிக்சல் ரியர் கேமராவை கொண்டிருக்கும்; இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 400-சீரீஸ் சிப்செட் (Snapdragon 400-series chipset) மூலம் இயக்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000 முதல் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4.ரியல்மி ஜிடி 5( Realme GT 5): கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 24ஜிபி வரையிலான ரேம், குவால்காமின் பிளாக்ஷிப் ப்ராசசர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை பேக் செய்யும். இருப்பினும் ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை நிர்ணயம் பற்றி எந்த தகவலும் இல்லை.
5.ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open): முன்னதாக வெளியான சில லீக்ஸ் தகவல்கள், ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று தெரிவித்தன. இருப்பினும் சமீபத்திய தகவல்கள் இது செப்டம்பரில் தான் வெளியாகும் என்று தெரிவிக்கின்றன. ஆக இந்த ஸ்மார்ட்போனின் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்வது நல்லது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜூம் இடம்பெறலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








