இந்த MOTOROLA 5G போன் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னா போட்டிபோட்டு வாங்குவாங்க: அப்படியென்ன ஸ்பெஷல்.!

|

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு
ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது.

மோட்டோரோலா எக்ஸ்40

மோட்டோரோலா எக்ஸ்40

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் சில அம்சங்கள் AnTuTu தளத்தில் வெளிவந்துள்ளது.

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன்சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி வேகமாக பயன்படுத்த முடியும். கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனின் ஸ்பெஷல் என்னவென்றால் அது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி தான்.

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

ஒஎல்இடி டிஸ்பிளே

ஒஎல்இடி டிஸ்பிளே

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 6.67-இனச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,400 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

வாய் பிளக்க வைக்கும் விலைக்குறைப்பு! இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க Amazon-ல் குவியும் கூட்டம்!வாய் பிளக்க வைக்கும் விலைக்குறைப்பு! இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க Amazon-ல் குவியும் கூட்டம்!

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4900 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன்" டொனால்ட் டிரம்ப்பை மீட்டு கெத்து காட்டிய Elon Musk!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
upcoming Moto X40 smartphone with SNAPDRAGON 8 GEN 2 feature: Specs, Price and More: : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X