Home
Mobile

இப்படியொரு போனுக்காக தான் வெயிட்டிங்: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் Moto X40..!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மர்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ்40

மோட்டோ எக்ஸ்40

குறிப்பாக இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன்  சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

மோட்டோ எக்ஸ்40 போனின் மாடல் எண் XT2301-5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா

50எம்பி ரியர் கேமரா

இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ இ32

மோட்டோ இ32

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 700 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹீலியோ ஜி37 சிப்செட்

ஹீலியோ ஜி37 சிப்செட்

மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மிடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம்

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்

மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். குறிப்பாக Eco Black மற்றும் Artic White நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
upcoming Moto X40 will feature a Snapdragon 8 Gen 2 SoC chipset: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X