அடுத்த வாரம் அமோகம்.. 1 இல்ல.. 6 புது போன்கள் அறிமுகம்.. என்னென்ன மாடல்கள்? என்ன விலைக்கு வரும்?
அடுத்த வாரம்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூன் 24 முதல் ஜூன் 27 ஆம் தேதிக்குள்.. மொத்தம் 3 பிராண்டுகள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன. அவைகள் ஒன்பிளஸ் (OnePlus), மோட்டோரோலா (Motorola) மற்றும் விவோ (Vivo) நிறுவனங்கள் ஆகும். இம்மூன்று நிறுவனங்களில் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்களையும், மோட்டோரோலா நிறுவனம் 3 போன்களையம், விவோ 1 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் (Upcoming Mobile Phones) எந்தெந்த தேதிகளில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரூ.21,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதிசெய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஆனது டூயல் ரியர் எல்இடி ஃபிளாஷ் யூனிட்ஸ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், ஹோல் பஞ்ச் கட்அவுட்டுடன் ஒரு பிளாட் டிஸ்பிளே, 80W வயர்டு SuperVOOC சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி சோனி LYT-600 மெயின் கேமரா போன்றவைகளை கொண்டிருக்கும்.
2. மோட்டோரோலா ரேஸர் 50 சீரிஸ் மற்றும் மோட்டோ எஸ்50 நியோ (Motorola Razr 50 Series and Moto S50 Neo): இம்மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஜூன் 15 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதில் இந்தியா இல்லை என்றாலும் கூட ரேஸர் 50 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் ரேஸர் 50 மற்றும் ரேஸர் 50 அல்ட்ரா ஆகிய இரண்டும் அடுத்த மாத வாக்கில் இந்தியாவிற்கும் வரும்.
மூன்றாவது மாடல் ஆன மோட்டோ எஸ்50 நியோ ஆனது இதே பெயரின்கீழ் வரவில்லை என்றாலும் கூட, மோட்டோ ஜி சீரீஸின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, ரேஸ்ர் 50 ஸ்மார்ட்போன் ரூ.60,000-ஐ சுற்றிய பட்ஜெட்டிலும், ரேஸர் 50 அல்ட்ரா ரூ.90,000க்கு அருகாமையிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
3. ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro): சொல்லவே வேண்டாம், இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகமாகும். அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஏஸ் சீரிஸ் மாடல்கள் சீன சந்தைக்கு பிரத்யேகமானவை ஆகும். ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோஆனது ஜூன் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பவர் பேங்க் (OnePlus Power Bank), ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad Pro), ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) போன்ற புதிய தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): விவோ நிறுவனத்தின் இந்த புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று அறிமுகமாகும். இது விவோ டி3 (Vivo T3) மற்றும் விவோ டி3எக்ஸ் (Vivo T3x)மாடல்களுக்கு பிறகு அதே சீரிஸில் வரும் மூன்றாவது ஸ்மார்ட்போனாகும்.
இந்தியாவில் இது ரூ.14,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது இந்தியாவில் விவோ வழங்கும் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும், இது 50எம்பி மெயின் கேமரா மற்றும் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவையும் பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications