Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. ரூ.10,000 - ரூ.1 லட்சம் வரை.. பிப். 2025-ல் அறிமுகமாகும் 12 புது போன்கள்.. லிஸ்ட் இதோ!

எப்படியோ.. 2025 ஆம் ஆண்டின் மிக நீளமான மாதமாக இருந்த ஜனவரி மாதம் இனிதே முடிவடைந்தது. 2025 பிப்ரவரி (February 2025) மாதமானது "வாம்மா மின்னல்" என்கிற அளவிற்கு, கண்களை மூடி திறப்பதற்க்குள் கடந்து விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் பிப்ரவரியில் 28 நாட்கள் தான் உள்ளன. அதிலும் 4 வார இறுதிகள் என 8 நாட்கள் சனி, ஞாயிறு வேறு!

இப்படியாக 2025 பிப்ரவரி ஆனது "ஷார்ட் அன்ட் ஸ்வீட்" ஆன மாதமாக இருந்தாலும் கூட, இம்மாதத்தில் அறிமுகமாக போகும் புதிய ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையில் குறைவே இருக்காது. 2025 பிப்ரவரி மாதத்தில், வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக 12 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக இந்த 2025 பிப்ரவரியில் என்னென்ன நிறுவனங்கள் தத்தம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. அவைகளின் நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

பிப். 2025-ல் அறிமுகமாகும் 12 புது போன்கள்.. லிஸ்ட் இதோ!

01. ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R): ஐக்யூ நிறுவனத்தின் இந்த புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 செக்மென்ட்டில் ஒரு கட்டாய விருப்பமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 144ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளே மற்றும் தரமான கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. விவோ வி50 சீரீஸ் (Vivo V50 Series): இந்த சீரீஸின் கீழ் விவோ வி50 மற்றும் விவோ வி50 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸின் விலை ரூ.40,000 - ரூ.50,000 செக்மென்ட்டில் இருக்கலாம். இரண்டு போன்களும் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, 50MP பிரைமரி கேமரா மற்றும் 50எம்பி அல்ட்ரா-வைட் சென்சார், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்

03. சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56): இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.32,990 மற்றும் ரூ.43,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் ஒரு தனித்துவமான டேப்லெட் வடிவ கேமரா யூனிட் மற்றும் மேம்பட்ட செயல்திறனை எதிர்பார்க்கலாம்

04. ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2): சீனாவில் ஒப்போ பைண்ட் என்5 ஆக அறிமுகம் மாடல் உலகின் மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக அறிமுகம் செய்யப்படும். இதுவரை அறிமுகமான போல்டபிள் ஸ்மார்ட்போன்களிலேயே இதுதான் மிகவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1,39,990 வரை செல்லலாம்.

05. டெக்னோ கர்வ் (TECNO Curve): பெயர் குறிப்பிடுவது போலவே இது டெக்னோ நிறுவனத்தின் முதல் கர்வ்டு டிஸ்பிளே ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்தியாவில் இது ரூ.10,000 - ரூ.20,000 செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தலாம். இது பட்ஜெட்டி விலையில் பிரீமியம் லுக்கை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 சீரீஸ் (ASUS ROG Phone 9 Series): இந்த சீரிஸின் கீழ் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோ (Asus ROG Phone 9 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இரண்டு போன்களும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 5,800mAh பேட்டரி மற்றும் 165ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளே மூலம் கேமிங் ஆர்வலர்களை சுண்டி இழுக்கும். விலையை பொறுத்தவரை ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.83,990 க்கும், ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ1,01,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

07. ஷாவ்மீ 15 சீரீஸ் (Xiaomi 15 Series): இந்த சீரீஸின் கீழ் ஷாவ்மீ 15 (Xiaomi 15), ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro) மற்றும் ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அல்ட்ரா மாடல் எம்டபுள்யூசி 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸில் லைகா கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 90W சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரிகளை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Mobile Phones in February 2025 iQOO Vivo Xiaomi Samsung OnePlus TECNO ASUS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X