2017-ல் என்னென்ன எல்ஜி கருவிகள் வெளியாகும், ஒரு பார்வை.!

Written By:

2016ஆம் ஆண்டு பொதுவாக அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் ஒரு பொற்காலமாக இருந்தாலும் எல்.ஜி நிறுவனத்தை பொருத்தவரையில் கடந்த ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாகவே இருந்தது.

2017-ல் என்னென்ன எல்ஜி கருவிகள் வெளியாகும், ஒரு பார்வை.!

இந்த நிறுவனத்தின் கனவு மாடலான எல்ஜி G5 மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை இதற்கு காரணம் மிக மோசமான டெக்னாலஜி என்று விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் எல்ஜி V20 மாடலும் போதுமான அளவுக்கு விளம்பரம் இல்லாததால் கடந்த ஆண்டின் கவனிப்பு இல்லா போன்களின் பட்டியலில் இணைந்தது.

சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் : ரூ.6,890/- முதல், என்னென்ன அம்சங்கள்.!?

ஆனாலும் இந்த ஆண்டு எல்.ஜி நிறுவனத்திற்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

2017-ல் என்னென்ன எல்ஜி கருவிகள் வெளியாகும், ஒரு பார்வை.!

எல்.ஜி G6:

எல்ஜி G5 மாடலை அடுத்து எல்ஜி நிறுவனம் வெளியிட உள்ள மாடல் தான் எல்ஜி G6. இந்த மாடல் போன் மாடுலர் டிசைனை கைவிட்டு, ஓல்ட் இஸ் கோல்ட் என்பதன்படி பழைய கேண்டிபார் மாடலுடன் வெளிவரவுள்ளது என்பது ஒரு சர்ப்ரைஸ்

இந்த மாடல் ஸ்மார்ட்போன் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி இந்த எல்ஜி G6 மாடல் 5.3 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் LCD பேனல் டிஸ்ப்ளேவுக்கு பதில் OLED டிஸ்ப்ளே இந்த மாடலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

2017-ல் என்னென்ன எல்ஜி கருவிகள் வெளியாகும், ஒரு பார்வை.!

மேலும் இந்த போனின் பிராஸசர் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் குவால்கோம் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டதாக இந்த எல்ஜி G6 இருக்கும் என்ற வதந்திகள் கிளம்பியுள்ளது. மேலும் 6GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் இதில் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் கேமிராவை பொருத்த வரையில் இந்த எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக மெகா பிக்சலை கொண்டதாக இருக்கும் என்று நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் இந்த மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் மாடுல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2017-ல் என்னென்ன எல்ஜி கருவிகள் வெளியாகும், ஒரு பார்வை.!

எல்ஜி V30

2017ஆம் ஆண்டில் எல்ஜி நிறுவனம் வெளியிட உள்ள இந்த எல்ஜி V30 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெகு ரகசியமாக வைக்கப்பட்டதில் இருந்தே இதில் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த போனின் மிகப்பெரிய சிறப்பாக செகண்டரி ஸ்க்ரீன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த மாடல் போன் நிச்சயம் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை ஒரு கை பார்க்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Here are a few upcoming smartphones from LG that are rumored to launch in 2017.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot