அடுத்த ஜெனெரஷன் சிப்செட்.. கூடவே 12ஜிபி RAM.. பல பிளாக்ஷிப்களை வச்சி செய்ய போகும் Vivo!

|

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ்

விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ்

அதாவது ஒன்பிளஸ் போன்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். மேலும் இப்போது இணையத்தில் கசிந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

அதாவது இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் மாடல் எண் V2227A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக
கேமிங் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக பயன்படும் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்.

பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!

Samsung E6 AMOLED டிஸ்பிளே

Samsung E6 AMOLED டிஸ்பிளே

அதேபோல் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஆனது 2கே ஆதரவு கொண்ட 6.78-இன்ச் Samsung E6 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 48 megapixel ultra-wide angle shooter + 50எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 64எம்பி periscope lens என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 13

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இரவோடு இரவாக நடந்த வேலை! இந்த 2 நகரங்களில் உள்ள Jio யூசர்கள் கொடுத்து வச்சவங்க! ஏன்னா?இரவோடு இரவாக நடந்த வேலை! இந்த 2 நகரங்களில் உள்ள Jio யூசர்கள் கொடுத்து வச்சவங்க! ஏன்னா?

 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஆடு உடலில் மஸ்க் தலை! 30 அடியில் சிலை உருவாக்கிய ரசிகர்கள்.. இதில் இவ்வளவு ரகசியமா?ஆடு உடலில் மஸ்க் தலை! 30 அடியில் சிலை உருவாக்கிய ரசிகர்கள்.. இதில் இவ்வளவு ரகசியமா?

கனெக்டிவிட்டி

விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவு, 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், புளூடூத் 5.2, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Upcoming Flagship Camera Smartphone Vivo X90 Pro Plus to pack Snapdragon 8 Gen 2 chipset and 12GB RAM: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X