Just In
- 46 min ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- 2 hrs ago
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- 15 hrs ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 16 hrs ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
Don't Miss
- News
ட்விஸ்ட்.. எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.. ஏன்? என்ன நடந்தது?
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Movies
அதிர்ச்சி.. பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவசரப்பட்டு இப்போவே போன் வாங்காதீங்க.! 2023ல பட்ஜெட் பிரைஸ்ல 5G போனே வாங்கலாம்.!
அனைவருமே புதிய வருடத்தை புதிய பொருட்களுடன் தொடங்க விருப்பப்படுவது வழக்கம். அதேபோலத் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய படைப்புகளை அறிமுகம் செய்து மக்களைக் குஷி படுத்துவாங்க. அப்படி உங்களுக்கும் இந்த வருட பிறப்பில் புதிய ஸ்மார்ட்போன் (smartphone) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கொஞ்சம் பிரேக் போடுங்க.. கொஞ்சம் வெயிட் செஞ்சா பட்ஜெட் விலையில 5ஜி போன்-னே (5G phone) நீங்கள் வாங்கலாம்..
அந்த வகையில், 2023ல மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய அறிமுக ஸ்மார்ட்போன்களின் (New Launch Smartphones 2023) தொகுப்பைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

1. ரியல்மி 10 5ஜி (Realme 10 5G)
இந்த ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட் போன் ஆக்டா கோர் MediaTek MT6833 Dimensity 700 சிப்செட்டுடன் Android 12 தளத்தில் உருவாக்கப்படவுள்ளது.
இது 8GB ரேம் உடன் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இரண்டு வேரியண்ட்களா அறிமுகம் செய்யப்படுகிறது.
இதில் 50MP + 2MP என இரண்டு கேமராக்களும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

ரியல்மி 10 5ஜி விலை என்ன?
இதன் டிஸ்பிளே 6.6' இன்ச் LCD உடன் 90 Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இது வைஃபை, ப்ளூடூத் வசதி, கைரேகை சென்சார், மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் வருகிறது.
இந்த ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 2023ல இந்தியச் சந்தையில் - ரூ. 14,790 என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த டிவைஸ் பொங்கல் (Pongal) சிறப்பு விற்பனையின் போது கிடைக்க வாய்ப்புள்ளது.

2. ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G)
சியோமி நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்மார்ட்போனான ரெட்மி பிராண்டின் கீழ் இந்த புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ அறிமுகம் செய்யப்படுகிறது.
இது ஜனவரி 2023ல் அறிமுகம் செய்யப்படும்.
இது MediaTek Dimensity 1080 MT6877V சிப்செட் உடன் Android 12 தளத்தில் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம், உடன் 5ஜி சப்போர்ட் உடன் வருகிறது. இது 6.67' இன்ச் OLED கொண்ட 120 Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?
இது வைஃபை, v5.2 ப்ளூடூத் வசதி, கைரேகை சென்சார், மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.
இது 6GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த டிவைஸ் 50MP + 8MP + 2MP என்று ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் இது 16MP செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 2023ல இந்திய சந்தையில ரூ. 20,590 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

3. வீவோ Y35 5ஜி (Vivo Y35 5G)
வீவோ Y35 5ஜி ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 700 MT6833 சிப்செட் உடன் Android 13 தளத்தில்இயங்குகிறது.
இது 4GB ரேம், 6GB ரேம் மற்றும் 8GB ரேம் என்று மூன்று ரேம் வேரியண்ட் உடன் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இந்த டிவைஸ் 13 MP + 2MP என இரண்டு கேமரா கொண்ட டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

வீவோ Y35 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?
இது 6.51 இன்ச் IPS-LCD டிஸ்ப்லே, வைஃபை, v5.2 ப்ளூடூத் வசதி, கைரேகை சென்சார், மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் வருகிறது.
இந்த வீவோ Y35 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 2023ல இந்திய சந்தையில் ரூ. 14,190 என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்படும்.
இந்தியாவில் இது 5ஜி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. மோடோ ஜி பிளே 2023 (Moto G Play 2023)
பிரபலமான Motorola தயாரிப்பு நிறுவனத்தின் படைப்பான இந்த Moto G Play 2023 ஸ்மார்ட்போன் MediaTek MT6765G Helio G35 சிப்செட்டுடன் Android 12 தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது 6.5' இன்ச் கொண்ட IPS-LCD உடன் 90 Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவுடன் வருகிறது.
இது வைஃபை, v5.0 ப்ளூடூத் வசதி, கைரேகை சென்சார், மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் வருகிறது.

மோடோ ஜி ப்லே ஸ்மார்ட்போன் விலை என்ன?
இந்த ஸ்மார்ட்போன் 3GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும்.
இந்த மோடோ ஜி பிளே டிவைஸ் 16MP + 2MP + 2 MP என மூன்று பின்பக்க கேமராவுடன் வருகிறது.
இதன் முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது.
இந்த மோடோ ஜி ப்லே ஸ்மார்ட்போன் மார்ச் 2023ல இந்திய சந்தையில் ரூ. 13,990 என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. ஒன்ப்ளஸ் நார்ட் 3 (Oneplus Nord 3)
இந்த Oneplus Nord 3 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8100 சிப்செட்டுடன் Android 12 தளத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இது 6.56' இன்ச் IPS-LCD உடன் 60 Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது.
இது வைஃபை, ப்ளூடூத் வசதி, கைரேகை சென்சார், மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் மற்றும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Oneplus Nord 3 டிவைஸ் விலை என்ன?
இந்த Oneplus Nord 3 டிவைஸ் 50 MP + 8 MP + 2 MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில் இது 16 MP செல்ஃபி ஸ்னாப்பர் உடன் வருகிறது.
இந்தியச் சந்தையில் இதன் தற்போதைய விலை ரூ. 20,000 முதல் ரூ. 25,000-திற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பெரும்பாலும், அடுத்த ஆண்டின் முதல் கால் பகுதிக்குள் அறிமுகம் செய்யப்படும். சமீபத்தில் கிடைத்த லீக் படி, இது ஜனவரி 2023ல் அறிமுகம் செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏன் வெயிட் செய்து புது போன் வாங்க வேண்டும்? காரணம் இது தான்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் எல்லாம் அடுத்த ஆண்டு (2023) இல் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஜனவரிக்குப் பிறகு வாங்குவது சிறப்பானதாக இருக்க கூடும்.
காரணம், அடுத்த ஆண்டில் பட்ஜெட் செக்மென்ட்டில் அதிகப்படியான 5ஜி டிவைஸ்கள் இந்திய சந்தைக்குள் வரவுள்ளன.
இன்னும் பல மாடல்களை மற்ற நிறுவனங்களும் அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470