கண்ணா.. இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம்! Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!
மோட்டோரோலா நிறுவனம் புதிய Moto X40 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ எக்ஸ்40
அதேபோல் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
அதேபோல் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனில் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் இந்த மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ போன்.
மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ இ32
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 700 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மிடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ இ32 விலை
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








