Home
Mobile

4 நாளுக்கு முன்னாடி அறிமுகமான போனின் மீது ரூ.20,000 தள்ளுபடி.. நிக்காம விழும் ஆர்டர்.. என்ன போன்?

ரூ.1000, ரூ.2000 அல்ல.. கடந்த மார்ச் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான ஒரு ஷாவ்மீ ஸ்மார்ட்போனின் மீது ரூ.20,000 வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன போன்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன போன்? ரூ.20,000 வரையிலான தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுவது, ஷாவ்மீயின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஷாவ்மீ 14 (Xiaomi 14) மாடல் தான். இது கடந்த வாரம் ஷாவ்மீ 4 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) மாடலுடன் சேர்ந்து இந்திய சந்தையில் அறிமுகமானது.

4 நாளுக்கு முன்னாடி அறிமுகமான போனின் மீது ரூ.20,000 தள்ளுபடி!

ஷாவ்மீ 14 அசல் விலை VS ஆபர் விலை: இந்தியாவில் ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிளாசிக் ஒயிட், ஜேட் க்ரீன் மற்றும் மேட் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் ஷாவ்மீயின் ரீடெய்ல் பார்ட்னர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஷாவ்மீ 14 மீதான தள்ளுபடிகள்: பிளிப்கார்ட் வழியாக.. ஐசிஐசிஐ, ஆக்சிஸ் அல்லது அமெக்ஸ் கார்டுகளை பயன்படுத்தி ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும்.

4 நாளுக்கு முன்னாடி அறிமுகமான போனின் மீது ரூ.20,000 தள்ளுபடி!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது, கூடுதலாக ரூ.5000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். இப்படியாக ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.49,999 ஆக குறைக்க முடியும். அதாவது ஷாவ்மீ 14-ன் முதல் விற்பனையிலேயே ரூ.20000 வரையிலான டிஸ்கவுண்ட்டை பெற முடியும்!

ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வரும் ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போன் ஆனது 6.36-இன்ச் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் இணைந்து 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது.

4 நாளுக்கு முன்னாடி அறிமுகமான போனின் மீது ரூ.20,000 தள்ளுபடி!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 5எம்பி லைட் ஃப்யூஷன் 900 மெயின் கேமரா + ஓஐஎஸ் உடனான 50எம்பி 75மிமீ ஃப்ளோட்டிங் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

டால்பி அட்மாஸ் ஆதரவுடன் 4 மைக்ரோஃபோன் சீரீஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,610mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்தியாவில், ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் (மார்ச் 11) முன்பதிவு செய்ய கிடைக்கும்; ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் எல்டிபிஓ அமோஎல்இடி மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இதில் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் உடனான 50எம்பி சோனி எல்ஒய்டி900 மெயின் கேமரா மற்றும் முறையே 3.2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு கொண்ட இரண்டு 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார்கள் மற்றும் கடைசியாக 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது.

ஷாவ்மீ 14 அல்ட்ராவின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 90W வயர்டு, 80W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேடிங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Up to Rs 20000 Discount on Xiaomi 14 India Sale Started Check Launch Price Flipkart Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X